10 ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான 40 வயசு ஆசிரியை!

மாணவனுடன் சில நாட்கள் சேர்ந்தும் வாழ்ந்துள்ளார்.

ஆசிரியை
ஆசிரியை

கேரளாவில், 10 வகுப்பு மாணவனை, 40 வயது ஆசிரியை ஆசை வார்த்தைக் காட்டி ஏமாற்றி அவனுடன் குடும்பம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியை

கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வருபவர் பெரோனா. 40 வயதான இவர், அதே பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவனுக்கும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாணவனை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இது தொடர்பான புகாரின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய கேரள போலீசார், சென்னை சூளைமேடு வந்து ஆசிரியை பெரோனாவை கைது செய்து மாணவனை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணை திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியை பெரோனா திருமணமாகி விவகாரத்து பெற்றவர். அவருக்கு 10 வயதில் மகனும் இருக்கிறார். இந்நிலையில் தனது கணவனிஒன் பிரிவை நினைத்து வருந்திய ஆசிரியைக்கு

.ஆசிரியை விவாகரத்து பெற்றவர். அவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். மாணவனின் பேச்சு ஆறுதலாக இருந்தது. சமீபத்தில் ஆசிரியை அந்த மாணவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.

அப்போது தான் மாணவனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை ஏமாற்றி தன்னுடன் அழைத்து சென்று தலை மறைவாகியுள்ளார். மாணவனுடன் சில நாட்கள் சேர்ந்தும் வாழ்ந்துள்ளார். அதன் பின்பு தான் மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்,

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala teacher was arrested kidnapping student

Next Story
சபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதிசபரிமலை தீர்ப்பு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட கருத்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com