Advertisment

குஜராத் மாடல் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் கேரளா…எதிர்க்கட்சியினர் விமர்சனம்

இடதுசாரி அரசின் இந்த நடவடிக்கை, முதல்வர் பினராயி விஜயனுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான "நெருக்கமான உறவை" அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
குஜராத் மாடல் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் கேரளா…எதிர்க்கட்சியினர் விமர்சனம்

கேராளாவை ஆளும் சிபிஎம் அரசு, பாஜக ஆளும் குஜராத்தில் முதல்வர் அலுவலகத்தில் செயல்படும் டாஷ்போர்டு அமைப்பைப் பார்த்து கற்றுக்கொள்ள மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. சிபிஎம் அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகள், தோல்வியுற்ற ஆட்சி என கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய், அவரது அலுவலகப் பணியாளர் அதிகாரி என்.எஸ்.கே. உமேஷ் உள்ளிட்ட கேரளக் குழுவினர், இன்று வியாழக்கிழமை குஜராத்தில் நடக்கும் டாஷ்போர்டு அமைப்பின் விளக்கக்காட்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நடவடிக்கையானது சிபிஎம் கண்ணூரில் நடந்த கட்சி மாநாட்டில் 'கேரள மாடலின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை' நாடு முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குஜராத் டாஷ்போர்டு மாடல் பல மாநிலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல மாநில அதிகாரிகள் அதனை கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கேரளாவின் இத்தகைய நடவடிக்கை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரி அரசின் இந்த நடவடிக்கை, முதல்வர் பினராயி விஜயனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான "நெருக்கமான உறவை" அம்பலப்படுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் நல்லாட்சி நிர்வாகத்தை விஜயன் கற்றுக்கொள்ள வேண்டும் என மாநில பாஜக தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு அதிகாரப்பூர்வமாக சிபிஎம் பதிலளிக்கவில்லை. ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், பிரதமர், விஜயனுடனான ஒரு உரையாடலின் போது, குஜராத் முதல்வரின் டாஷ்போர்டில் இருந்து கற்றுக்கொள்ள பரிந்துரைத்ததார். ஆனால், அந்த மாடலை கேரளாவில் அமலப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பபடவில்லை என்றார்.

குஜராத் கல்வி அமைச்சர் ஜிது வகானி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், கேரளாவைச் சேர்ந்த குழு முதல்வர் டாஷ்போர்டைப் பார்வையிடுவது நல்ல விஷ்யம். அதனை பார்வையிட ஏற்கனவே பல மாநிலங்களின் அதிகாரிகள் குஜராத் வந்துள்ளனர்.

சுகாதாரம், கல்வி, விவசாயம் என அனைத்து துறைகளிலும் மாநிலமும், மக்களும் டாஷ்போர்டு மூலம் பயனடைந்துள்ளனர். குஜராத்தின் மற்ற துறைகளால் எடுக்கப்பட்ட முன்முயற்சிகளையும், பிற மாநிலங்கள் ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும்" என்றார்.

2018 ஆம் ஆண்டு விஜய் ரூபானி முதலமைச்சராக இருந்தபோது தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) தொழில்நுட்ப ஆதரவுடன் "குஜராத் முதல்வர் டாஷ்போர்டு" அமைக்கப்பட்டது.

குஜராத் அதிகாரிகள் கூற்றுப்படி, முதல்வர் டாஷ்போர்டு திட்டம் மூலம் குறைந்தபட்சம் 20 வெவ்வேறு அரசுத் துறைகளில் நிர்வகிக்கும் செயலிகளை கண்காணிக்க முடியும். முக்கியமாக மாநிலம் முதல் கிராமம் வரையிலான செயல்பாட்டை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தப்படியே அணுக முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, டாஷ்போர்டு அமைப்பு கோவிட் சூழ்நிலையை நிர்வகிப்பதற்கானமுக்கிய கருவியாக பயன்ப்டுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை எளிதாக கணக்கிடப்பட்டது.

இதுதவிர, முதல்வர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள டாஷ்போர்டைப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் நேரடியாக கண்காணிக்கலாம் என தெரிவித்தார்.

தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தலைமையிலான நிதி ஆயோக் குழு, முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு குழு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கர்நாடகாவைச் சேர்ந்த குழுக்கள் மட்டுமின்றி மத்திய அமைச்சர்களான அஷ்வினி வைஷ்ணவ், ஸ்மிருதி இரானி , முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டாஷ்போர்டை ஆய்வு செய்ய குஜராத் சென்றுள்ளனர்.

கடந்த நவம்பரில், பொது விவகார குறியீடு (பிஏஐ) 2021 அடிப்படையில் கேரளாவை நாட்டிலேயே சிறந்த முறையில் நிர்வகிக்கிறது என்று விஜயன் அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய கேரளா காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன், முதல்வர் தனது ஆட்சியில் கேரளா நம்பர் 1 என பேசுகிறார். மோடியுடனான நெருங்கிய தொடர்புதான் விஜயனை குஜராத் மாதிரியை ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது. இது, காங்கிரஸை வீழ்த்த சிபிஎம் கட்சியுடன் மோடி கைக்கோர்ப்பது பிரதிபலிக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறியது, இறுதியாக குஜராத் மாதிரி ஆட்சியை விஜயன் ஏற்க வேண்டிய நிலை வந்துள்ளது. அவர் தோல்வியடைந்த கேரள மாடலை கைவிட்டுட்டு, குஜராத் மாடலை மாநிலத்தில் கொண்டு வர வேண்டும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Congress Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment