கேரள மாநில வக்ப் வாரியத் தலைவராக பதவியை முடிக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மீதம் உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் (மார்க்சிஸ்ட்) <சி.பி.ஐ(எம்)> தலைவர் டி.கே.ஹம்சா, வக்ஃப் வாரிய அமைச்சர் வி.அப்துரஹிமானுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி விலகுவதற்கான தனது முடிவை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அமைச்சருடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று டி.கே.ஹம்சா கூறினார். மேலும், அவரை அப்பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை கட்சி ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: 125 அடியில் அம்பேத்கர் சிலை; ரூ.10 லட்சம் நிதியுதவி: வெகுவான பாராட்டுகளை பெறும் கே.சி.ஆரின், “தலித் மாடல்”
“கட்சியானது, அமைப்பு மற்றும் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகிக்கும் அதன் தலைவர்களுக்கு 75 வயது வரம்பை முன்பே நிர்ணயித்திருந்தது. ஆனால், என்னை தலைவராக நியமிக்கும்போது வயது வரம்புகளை தளர்த்தியது. தலைவர் பதவிக்காலம் முடியும் போது எனக்கு 87 வயதைத் தாண்டிவிடும். அதனால், பதவி விலக முடிவு செய்துள்ளேன்,'' என்று ஹம்சா கூறினார்.
“சி.பி.ஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலகம் என்னுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்தது. நான் பல உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடுகிறேன். எனது வயது மற்றும் உடல்நலக் குறைவைக் கருத்தில் கொண்டு அந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்,'' என்று ஹம்சா கூறினார்.
டி.கே.ஹம்சாவின் இந்த முடிவை முஸ்லிம் அரசியல் கட்சிகள், குறிப்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வரவேற்றுள்ளது. ஏனெனில் ஹம்சா முஸ்லீம் லீக்கை கடுமையாக விமர்சித்து வந்தார்.
"முஸ்லீம் லீக் எப்போதும் என்னை விமர்சித்து வந்துள்ளது, நான் அதனை கண்டுக்கொண்டதில்லை. 1991 இல் பேப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து என்னைத் தோற்கடிப்பதற்காக பா.ஜ.க.,வுடன் கூட கூட்டணி அமைத்தது,” என்று ஹம்சா கூறினார்.
இந்த விவகாரம், குறித்து பதிலளித்த அமைச்சர் அப்துரஹிமான், ஹம்சாவின் முடிவு குறித்து தனக்குத் தெரியாது. நிர்வாகக் குழுக் கூட்டங்களில் கூறப்பட்ட சில சாதாரண கருத்துக்களைத் தவிர, அவருடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஹம்சாவின் தலைமை பொறுப்பில் வாரியம், வக்ஃப் சொத்துக்களை அதிக அளவில் வைத்திருப்பது உட்பட சிறப்பான பணிகளை மேற்கொண்டது, என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil