Advertisment

காதலனுக்கு ஆயுர்வேத பானத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை; கேரளப் பெண் கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு

வழக்கு விசாரணையின்படி, 24 வயதான அந்த பெண் வலி நிவாரணி மருந்துகள் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவான ஆன்லைன் தேடல்களை மேற்கொண்டு, ஷாரோன் ராஜுக்கு பலமுறை விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kerala woman murder boyfriend

கன்னியாகுமரியில் வசிக்கும் கிரீஷ்மா, ஷாரோன் ராஜை கொலை செய்ய சதி செய்ததாக அரசு தரப்பு கூறுகிறது. (Source: Express Photo)

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின்கரையில் உள்ள அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை, 24 வயதான கிரீஷ்மா, தான் காதலித்த ஷாரோன் ராஜை 2022-ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. தண்டனை காலம் உள்ளிட்ட விவரம் சனிக்கிழமை வழங்கப்பட உள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Spiked juice to ayurvedic drink: Greeshma, Kerala woman who tried to poison boyfriend multiple times before finally succeeding, found guilty

கிரீஷ்மாவின் தாய் சிந்துவை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால், மற்றொரு குற்றவாளியான அவரது மாமா நிர்மலகுமாரன் நாயர் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியுள்ளபடி, கன்னியாகுமரியில் வசிக்கும் கிரீஷ்மாவும், திருவனந்தபுரத்தில் உள்ள பரஸ்சாலாவைச் சேர்ந்த ஷாரோனும், 2021-ம் ஆண்டு ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் படிக்கும்போது, அதாவது ஷாரோன் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது இருவரும் நண்பர்களாக இருந்தனர்.

Advertisment
Advertisement

அவர்கள் இருவரும் உறவில் இருந்தபோதிலும், மார்ச் 2022-ல், கிரீஷ்மாவின் குடும்பத்தினர் ஒரு ராணுவ அதிகாரியுடன் திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும், அவர் அந்த திருமணத்திற்கும் சம்மதித்தார். அவரது திருமணம் விரைவில் நெருங்கி வருவதால், கிரீஷ்மா ஷாரோனைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்ட பிறகும் அவருடன் உறவைத் தொடர்ந்ததாகவும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

அரசு தரப்பு வழக்குரைஞரின் குறிப்பிட்டுள்ளபடி, வலி ​​நிவாரணி மருந்துகள் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து கிரீஷ்மா விரிவான ஆன்லைன் தேடல்களை மேற்கொண்டார். மேலும், ஷாரோனுக்கு பல முறை விஷம் கொடுக்க முயன்றார். ஒருமுறை, அவர் பல மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அவருக்கு குடிக்க வைத்திருந்தார். மாத்திரைகள் கலந்த சாற்றையும் அவருக்குக் கொடுத்தார். இவை கிரீஷ்மா எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாததால், அவர் அவருக்கு ஜூஸ் குடிக்கும் சவாலை கூட கொடுத்ததாக விசாரணையில் கண்டறிந்தனர்.

இவற்றிலிருந்து ஷரோன் மீண்டு வந்ததால், அவர் வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்த முடிவு செய்தார்.

அக்டோபர் 14, 2022-ல், ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, கிரீஷ்மா ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்து, அவருக்கு மருத்துவ ஆயுர்வேத பானத்தை வழங்கினார். அதில் அவர் சில களைக்கொல்லிகளைக் கலந்திருந்தார் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ஆயுர்வேதக் கலவை வழக்கமாக கசப்பான சுவையுடன் இருந்ததால், ஷரோன் வழக்கத்திற்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை. இருப்பினும், கிரீஷ்மாவின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அன்றிரவு அவர் அசௌகரியமாக உணரத் தொடங்கினார். அன்றிரவு பல முறை வாந்தி எடுத்தார், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதான ஷாரோன் பல உறுப்புகள் செயலிழந்து அக்டோபர் 25-ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன், கிரீஷ்மாவால் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். மேலும், அவர் தன்னை "ஏமாற்றிவிட்டார்" என்று ஒரு நண்பரிடம் கூறினார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அக்டோபர் 31-ம் தேதி கிரீஷ்மா கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, செப்டம்பர் 2023-ல் ஜாமீன் பெற்றார். குற்றத்தைத் தூண்டியதாகவும், ஆதாரங்களை அழித்ததாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தாயார் மற்றும் மாமாவும் கைது செய்யப்பட்டனர்.

ஐ.பி.சி பிரிவுகள் 364 (கடத்தல் அல்லது கொலைக்கு கடத்தல்), 328 (விஷம் கொடுத்து காயப்படுத்துதல்), 302 (கொலை), 201 (ஆதாரங்களை மறைத்தல் மற்றும் குற்றவாளியை மறைக்க தவறான ஆதாரங்களை வழங்குதல்), 203 (தவறான தகவல்களை வழங்குதல்) மற்றும் 34 (பொதுவான நோக்கத்திற்காக செய்யப்படும் குற்றச் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, ​​ஷரோனுடனான தனது உறவை முறித்துக் கொள்ள விரும்புவதாகவும், அவர்கள் நெருக்கமாக இருந்த தருணங்களின் காட்சிகளை அகற்றுமாறு அவரிடம் கேட்டதாகவும் கிரீஷ்மா கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஷாரோன் தனது வருங்கால கணவருடன் காட்சிகளைப் பகிர்ந்து கொள்வார் என்று அஞ்சியதாகவும், அதனால்தான் அவரது கொலையைத் திட்டமிட்டதாகவும் கிரீஷ்மா கூறினார்.

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment