Shaju Philip - ஷாஜு பிலிப்
கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீலேகா இன்று புதன்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இணைந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "பிரதமர் மோடியின் கவர்ச்சியே என்னை பா.ஜ.க-வில் சேர வைத்தது. பா.ஜ.க-வின் கொள்கைகளில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மூன்று வார கால சிந்தனைக்கு பிறகு பா.ஜ.க-வில் இணைகிறேன்.
மூன்று வாரங்களுக்கு முன், பா.ஜ.க-வில் சேரும்படி என்னை அணுகினர். நான் சேவை ஆற்றிவதில் பாரபட்சமற்ற அதிகாரியாக இருந்தேன். ஆனால் ஓய்வுக்குப் பிறகு, எனது அனுபவத்தின் அடிப்படையில், மக்களுக்குச் சேவை செய்ய இதுவே எனது சிறந்த வழி என்பதை உணர்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Kerala’s first woman IPS officer joins BJP
ஸ்ரீலேகாவை "தைரியமான அதிகாரி" என்று வர்ணித்த கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே சுரேந்திரன், அவர் கேரள மக்களை நன்கு அறிந்தவர் என்றும் காவல்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார் என்றும் கூறினார். "காவல் துறையில் பெண்களின் உரிமைக்காகப் போராடியவர். கேரளாவில் பா.ஜ.க மீதான தீண்டாமை ஒழிந்துவிட்டது." என்றும் அவர் கூறினார்.
கேரளா ஏ.டி.ஜி.பி எம்.ஆர் அஜித் குமார், ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களுடன் நடத்திய சந்திப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் ஸ்ரீலேகா பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸுப் பிறகு பா.ஜ.க-வில் இணைந்த இரண்டாவது முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார் ஸ்ரீலேகா.
யார் இந்த ஸ்ரீலேகா?
1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீலேகா, தனது பணி காலத்தின் கடைசி நாட்களில் கேரளாவின் சி.பி.ஐ(எம்) அரசாங்கத்துடனான உறவை முறித்துக் கொண்டார். அவர் ஓய்வு பெறும் நாளில், டி.ஜி.பி அந்தஸ்து அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முறையான பிரியாவிடை விழா மற்றும் மரியாதை நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு கல்லூரி விரிவுரையாளராகவும், வங்கி அதிகாரியாகவும் இருந்துள்ளார். அவர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி-யாகவும், பின்னர் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி-யாகவும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்தபோது, சி.பி.ஐ-யில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். மேலும், அவர் ஒன்பது புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீலேகா, டி.ஜி.பி அந்தஸ்து பெற்ற முதல் பெண் அதிகாரி என்கிற பெருமையும் பெற்றார். அவர் கடந்த 2020-ல் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின் பொது இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஸ்ரீலேகா ஓய்வுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப்புக்கு சிறைத்துறை இயக்குநர் ஜெனரலாக சிறப்புக் கவனம் செலுத்தி வசதிகள் செய்து கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கினார். இந்த வழக்கில் திலீப் நிரபராதி என்று தான் நம்புவதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனி தான் என்றும் அவர் கூறியிருந்தார். பல்சர் சுனி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது
2016 ஆம் ஆண்டில், ஏ.டி.ஜி-பியாக பணியாற்றிய போது, சக ஏ.டி.ஜி.பி டோமின் ஜே தச்சங்கரி "1987 ஆம் ஆண்டு தனது ஐ.பி.எஸ் பயிற்சி நாட்களில் இருந்து தன்னை குறி வைத்து துரத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும், வாகன வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக அவர் எதிர்கொண்ட விஜிலென்ஸ் விசாரணைக்காகவும் அவர் மீது குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“