scorecardresearch

ஏர் இந்தியா மறு முதலீடு : ஏலம் எடுப்பவர்களே கடன் சுமை அளவை தீர்மானிக்கலாம்!

2020 – 21க்கான மத்திய பட்ஜெட் தாக்குதலின் போது இந்த ரீ இன்வெஸ்ட்மெண்ட் இலக்காக ரூ. 2.1 லட்சம் கோடியை நிர்ணயம் செய்தது.

ஏர் இந்தியா மறு முதலீடு : ஏலம் எடுப்பவர்களே கடன் சுமை அளவை தீர்மானிக்கலாம்!

 Pranav Mukul

Key change in Air India disinvestment :  நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தினை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள், அவர்கள் ஏற்க விரும்பும் கடன் அளவை அவர்களே தீர்மானிக்கலாம் என்று இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 27 அன்று தனது பங்குகளை விற்க இரண்டாவது முயற்சியைத் தொடங்கும்போது, ரூ .23,286.50 கோடிக்கு விற்பனையுடன் தொகுக்கப்பட வேண்டிய நீண்ட கால கடன்களை மத்திய அரசு முடக்கியது. அதன் பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஒரு நிலையான கடன் அளவை கேரியருடன் இணைப்பதன் மிக முக்கியமான மாற்றத்தை குறிக்கிறது.

அக்டோபர் 30 முதல் டிசம்பர் 14 வரை வட்டி வெளிப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியையும் அரசாங்கம் நீட்டித்துள்ளது, இதன் மூலம் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு புதிய ஏல நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்ய அவகாசம் அளிக்கிறது.

வியாழக்கிழமை மத்திய அரசு, ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் தங்களின் ஏலத்தினை எண்டெர்ப்ரைஸ் மதிப்பின் அடிப்படையில் வைக்கலாம் என்று கூறியது. எண்டெர்ப்ரைஸ் மதிப்பானது இக்வைட்டி மற்றும் நிர்வாகத்தின் கடன் என இரண்டையும் சார்ந்தது. “சாத்தியமான ஏலதாரர்கள் சில காலமாக ஆர்வம் காட்டி வருகின்றனர், எனவே இதில் அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் வந்த பரிந்துரைகளை நான் நியாயமான முறையில் பரிந்துரைக்கின்றேன்” என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

To read this article in English

காலம் மற்றும் கொரோனாவின் தாக்கம் காரணமாக இழப்புகள் அதிகரித்துள்ளது எனவே கடனை எந்த அளவில் நிர்ணயித்தாலும் கூட அது ஏலதாரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனவரி மாதம், ஏர் இந்தியாவின் 100% அரசு பங்குகளையும், ஏர் இந்தியா 100% பங்குகளை கொண்டிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் 50% பங்குகளை கொண்டிருக்கும் ஏர் இந்தியா SATS ஆகியவற்றை விற்பனை செய்ய மார்ச் 17ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது மாற்றம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

ஏலம் எடுக்கப்படாத நிலையில், 2017 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் முதல் ரிஇன்வெஸ்மெண்ட் முயற்சியின் போது தொழில்துறை பங்கேற்பாளர்கள் எழுப்பிய முக்கிய கவலைகளில் ஒன்று கடன் அளவாகும். அரசாங்கம் பின்னர் தொகுக்கப்பட்ட தொகையை இரண்டாவது முயற்சியில் குறைத்தது.

இது ஒரு நிச்சயமற்ற சூழல் என்பதால் எந்த ஒரு அளவுகோலை சரிசெய்தாலும் அது செல்லுபடியாகாது என்ற எதிர்மறை கேள்வியையே உருவாக்கும். இது போன்ற சூழலில் ஒரு சிக்கலான இடத்திற்கு நாம் செல்வதை காட்டிலும் சிக்கல்களை கலைந்திருக்கின்றோம். இதனால் எந்த விதத்திலும் அதன் மதிப்புகள் குறியாது. சந்தையின் ஏல முறைகள் மூலமாக உண்மையான மதிப்பு கண்டறியப்படும் என்று துஹின் கந்தா பாண்டே கூறியுள்ளார். வென்ற ஏலதாரர் ஏலத் தொகையில் குறைந்தது 15 சதவீதத்தையாவது பணமாக அரசாங்கத்திடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்பதும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களில் ஒன்றாகும். 15% முன்பணம் செலுத்துதல் அவசியம் ஏன் என்றால் ஏலதாரர்களின் ஆர்வம் இதில் தெரியும் என்று பூரி கூறினார்.

இருப்பினும், இந்த விதி ஏலத்திற்கான அளவாக இருக்காது, இது மேற்கோள் காட்டப்பட்ட நிறுவன மதிப்பின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்.

ஏர் இந்தியா விற்பனை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையிலான பல அமைச்சர்கள் இடம் பெற்ற குழு பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்தார்கள். அதில் ஒன்று எந்த ஒரு முன் முடிவு செய்யப்பட்ட கடன் தொகை அற்ற ஏல அளவை சமர்பிக்கலாம் என்பதும் ஒன்றாகும். நிலைமை சீராகும் வரை ஏர் இந்தியாவை தனியார்மயமாக்காமல் மத்திய அரசு நடத்துவது மற்றும் அனைத்து ஏர் இந்திய வர்த்தக செயல்களையும் முடக்கிவிடுதல் போன்ற இதர வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

2020 – 21க்கான மத்திய பட்ஜெட் தாக்குதலின் போது இந்த ரீ இன்வெஸ்ட்மெண்ட் இலக்காக ரூ. 2.1 லட்சம் கோடியை நிர்ணயம் செய்தது. ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவற்றில் பங்கு விற்பனை மூலம் ரூ .90,000 கோடியையும், பிபிசிஎல், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பிற முதலீடுகள் மூலம் ரூ .1.20 லட்சம் கோடியையும் திரட்ட எதிர்பார்க்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Key change in air india disinvestment bidders can decide debt burden level