Advertisment

2016 பதான்கோட் தாக்குதல் : முக்கிய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

அதிகாலை 5.30 மணியளவில் மசூதிக்குள்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சியால்கோட் காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Paksitani Shahid Latif

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில், இயங்கி வரும் இந்திய விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னால் முக்கிய நபராக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இயக்கத்தைச் சேர்ந்த ஷாஹித் லத்தீப், நேற்று (அக் 11) பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது குறித்து சியால்கோட் காவல்துறையின் அறிக்கையின்படி, அதிகாலை 5.30 மணியளவில் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தஸ்கா சதர் முண்டேகேயில் நூர் மதீனா மசூதிக்குள் 3 அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து மக்கள் ஃபஜ்ர் தொழுகையை நடத்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஷாஹித் சாஹிப் மற்றும் அவரது பாதுகாவலர் ஹாஷிம் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் அப்துல் அஹத் என்ற மற்றொரு நபர் காயமடைந்தார். கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், அதை பயங்கரவாதம் என்று சொல்லலாம் என சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி ஹசன் இக்பால் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனவரி 2016 இல் பதன்கோட் விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்த ஷாஹித் லத்தீஃப், ஷாஹித் சாஹிப் உள்ளிட்ட 4 பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு தளத்தின் ஆதாரங்கள் அடையாளம் கண்டுள்ளன. அதன்பிறகு இவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று ஐஎஃப்ஏ (IAF) வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இது குறித்து 2016 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பதான்கோட் தாக்குதலின் பின்னணியில் லத்தீப்பை முக்கிய சதிகாரன் என்றும், அவரது பின்னணியில் இருந்தவர் ஜெய்ஷ் இஎம் தலைவர் மவுலானா மசூத் அசார் என்றும் என்ஐஏ கூறியது.

மேலும், சியால்கோட்டில் லத்தீஃப் நடத்திய கூட்டத்தில் ஏப்ரல் 2014 இல் தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று குற்றப்பத்திரிகையில் கூறியுள்ள ஐஎஃப்ஏ, லத்தீஃப் நடத்திய கூட்டத்தில் இருந்த பலரிடம் இருந்து சாட்சியிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இது குறித்து சாட்சி சொன்னவர்கள் பாகிஸ்தானில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாகவும், புகைப்படத்தில் லத்தீப்பை அடையாளம் காட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சாட்சி சொன்ன ஒருவர் கூறுகையில், 2014 ஏப்ரல்/மே மாதங்களில் பாகிஸ்தானின் சியால்கோட்டில் ஒரு தேராவில் நடந்த ஒரு கூட்டத்தில் ஷாஹித் லத்தீப் பதான்கோட் விமானப்படை நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்கான திட்டத்தைப் பற்றி விபரமாக தெரிவித்தார். ஷாகித் லத்தீப், கூகுள் மேப்பில் பதான்கோட் விமானப்படை நிலையம் அமைந்துள்ள இடத்தையும் காட்டி, அந்த நிலையத்தைச் சுற்றி காடுகள் இருப்பதால், தளத்தைத் தாக்குவது எளிது என்று கூறியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ரவூப், காஷிப் ஜான் மற்றும் லத்தீப் ஆகியோரின் தீவிர ஈடுபாட்டுடன், இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக சாட்சியங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை என்.ஐ.ஏ (NIA) மேற்கோள் காட்டியது. மேலும் குற்றப்பத்திரிகையில் இவர்கள் அனைவரும் பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய சதிகாரர்கள் மற்றும் உதவியாளர்களாக இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதான்கோட் விமானப்படை நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி,அப்பாவி மக்களைக் கொன்று, காயப்படுத்தி, அழித்த 4 பயங்கரவாதிகளுக்கு, காஷிப் ஜான் மற்றும் ஷாஹித் லத்தீப் ஆகியோர் வழிகாட்சியாக செயல்பட்டுள்ளனர்.  ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் ஏவியது குறித்து சட்டப்பூர்வ இடைமறிப்பு மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலில், குற்றம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட, பொருள் மற்றும் ஆவண சான்றுகள், தடயவியல் அறிக்கைகள் மற்றும் விரிவான அழைப்பு தரவு பகுப்பாய்வு ஆகியவை, ஜெய்ஷ் இம் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததை உறுதிபடுத்துகிறதுஎன்று என்.ஐ.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2020 இல், உள்துறை அமைச்சகம் (MHA) லத்தீப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் "பயங்கரவாதி" என்று அறிவித்தது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "JeM இன் சியால்கோட் துறையின் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட கமாண்டர் மற்றும் ஜெய்ஷ் இம் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஏவுவதில் ஈடுபட்டுள்ள லத்தீஃப் என்ற சோட்டா ஷாஹித் பாய், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிடுதல், எளிதாக்குதல் மற்றும் செயல்படுத்துவது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலாவில் வசிக்கும் லத்தீப், 90களின் முற்பகுதியில் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பின் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளார். தொடர்ந்து 1993 இல் ஹஸ்ரத்பால் ஆலயத்தின் முற்றுகையின் போது அதில் பதுங்கியிருந்த போராளிகளில் அவரும் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் பிறகு பாகிஸ்தானுக்குத் திரும்பிலத்தீப், மீண்டுமு் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

90களில் ஜம்முவில் உள்ள காந்திநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார், ஆனால் ஜம்மு காஷ்மீர் காவல்துறை அவரை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் மீண்டும் கைது செய்ததால் மேலும் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இறுதியாக 2010 இல் விடுவிக்கப்பட்ட லத்தீஃப் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அதே நேரத்தில், ஹர்கத்துடன் இருந்த மசூத் அசார் ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் 1999 இல் IC-814 பணயக்கைதிகள் நெருக்கடியின் போது விடுதலை செய்யப்பட்டார். பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணையில், லத்தீப் 2010-ல் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு ஜெய்ஷ் அமைப்பில் சேர்ந்தார் என்பது தெரியவந்துள்ளதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி பாகிஸ்தானில் கொல்லப்படுவது இது 6-வது முறையாகும். மற்றவர்கள்: ஜெய்ஷ் இயக்கம் மற்றும் ஐசி-814 கடத்தல்காரன் ஜாகூர் மிஸ்திரி (மார்ச் 1, 2022 அன்று கராச்சியில் கொல்லப்பட்டார்), ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பஷீர் அகமது பீர் (பிப்ரவரி 20, 2023 அன்று ராவல்பிண்டியில் கொல்லப்பட்டார்), அல் பத்ர் கமாண்டர் சயீத் காலித் ரசா பிப்ரவரி 26, 2023 அன்று கராச்சி, ஜம்மு காஷ்மீர் சையத் நூர் ஷலோபர் (மார்ச் 5, 2023 அன்று கைபர் பக்துன்க்வாவில் கொல்லப்பட்டார்), மற்றும் காலிஸ்தானி பயங்கரவாதி பரம்ஜித் சிங் பஞ்வார் (மே 6, 2023 அன்று லாகூரில் கொல்லப்பட்டார்) IS-கொராசன் தளபதி மற்றும் பயங்கரவாத ஆட்சேர்ப்பு ஜூன் 24, 2021 அன்று லாகூரில் 26/11 தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் லஷ்கர் இடி தலைவரான ஹபீஸ் சயீத் வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு நடந்தது, ஆனால் அவர் காயமின்றி தப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Army Pathankot
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment