Advertisment

யாத்திரையில் இருந்து வெளியேறி சோனியாவை சந்தித்த முக்கிய தலைவர்.. பின்னணி என்ன?

ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ள கே.சி.வேணுகோபால் யாத்திரையிலிருந்து வெளியேறி சோனியாவை சந்தித்துப் பேசினார்.

author-image
WebDesk
New Update
யாத்திரையில் இருந்து வெளியேறி சோனியாவை சந்தித்த முக்கிய தலைவர்.. பின்னணி என்ன?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது கேரளாவில் பயணம் தொடர்ந்து வருகிறது. வரும் 30ஆம் தேதி கர்நாடகாவில் 22 நாள் பயணம் தொடங்குகிறது.

Advertisment

ராகுலுடன் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். மறுபுறம் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேட்புமனு தாக்கல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் வரவேண்டும் என பல மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்தநிலையில் ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சோனியாவை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார்.

கடந்த திங்கள்கிழமை சசி தரூர் சோனியாவை சந்தித்து பேசினார். சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு மேற்பட்டோர் தேர்தலில் போட்டி ஏற்பட்டால் காங்கிரஸ் தலைமை நடுநிலை வகிக்கும் எனக் கூறியுள்ளது. இந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதுதான் கட்சியின் நிலைப்பாடு. தலைமையின் நிலைப்பாடும் அதுதான். யார் போட்டியிட்டாலும், தலைமை நடுநிலை வகிக்கும்” என்று வேணுகோபால் கூறினார்.

தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற ராகுல் காந்தியின் முடிவு குறித்து கேட்டதற்கு, "ராகுல் எங்களிடம் எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் வர கோரி பிசிசிக்கள் (பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள்) தீர்மானங்களை நிறைவேற்றுவதை கட்சித் தலைமை தடுக்க முடியாது.

இதில், ராகுல் காந்தி தான் முடிவு எடுக்க வேண்டும். ராகுல் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன்

காங்கிரஸ் தொண்டர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அனைத்து மாநிலங்களும் ராகுல் தலைவராக வேண்டும் என்று கோருகின்றன. எங்களுக்கும் ராகுல் காந்தி (தலைவராக) வேண்டும்.

மேலும் மூன்று மாநிலங்கள், ஹரியானா, கேரளா, ஜார்க்கண்ட் காங்கிரஸ் ராகுல் தலைவராக வேண்டும் என தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றியுள்ளன. இதன் மூலம் 10 மாநிலங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. சோனியா காந்தியுடனான எனது சந்திப்பு "வழக்கமான" ஒன்றாகும்" என்று வேணுகோபால் கூறினார்.

"சில நாட்களாக சோனியா வெளிநாட்டில் இருந்தார். நான் கேரளாவில் இருந்தேன். ஏன் அமைப்பு பொதுச் செயலாளர் கட்சித் தலைவரை சந்திக்க கூடாதா? என்றார். சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்பின் என்ன ஆலோசனை செய்ய வேண்டும்? செப்டம்பர் 24ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும்" என்றார்.

தொடர்ந்து," யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறும். தரூர் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, ​​ சசி தரூர் மட்டுமல்ல, போட்டியிட விரும்பும் எவரும் போட்டியிடலாம்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தரூரும் போட்டியிட விரும்புவதாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்தை கெலாட் கூட்டியுள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத் தொடரை கருத்தில் கொண்டு இந்த கூட்டம் அழைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பபினும், முதல்வர் பதவியை விட்டு கொடுக்க கெலாட் விரும்பவில்லை என்ற தகவலும் கட்சியில் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment