அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி 52 வயதான நிகில் குப்தா என்ற இந்தியரை கைது செய்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையடுத்து இந்தியா டெல்லியில் விசாரணைக் குழு அமைத்தது. இந்திய விசாரணைக் குழு பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் கர்ட் காம்ப்பெல் புதன்கிழமை கூறுகையில், “இந்திய அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகள் சிலவற்றின் பின்னணியில் என்ன சாத்தியமான நிறுவன சீர்திருத்தங்கள் அவசியமாக இருக்கலாம் என்பதை கவனமாக பார்த்து வருகின்றனர் என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: Khalistan separatist Pannun ‘murder’ plot: US says India looking at ‘institutional reforms’
மேலும், டெல்லியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் அமெரிக்கா, இந்த வழக்கு குறித்து தொடர்ந்து அப்டேட்களை கேட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் கர்ட் காம்ப்பெல் இந்தியா வருகை தந்தார். அதன் பின் ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதிலளித்த காம்ப்பெல், “நாங்கள் இந்த வழக்கு குறித்து இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து வழக்கு குறித்தான அப்டேட்களை கேட்டுவருகிறோம். இந்த விவகாரம் இந்திய அரசாங்கத்திடம் நேரடியாக தலைமைத்துவத்தின் உயர் மட்டத்தில் எழுப்பப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவைச் சேர்ந்த முகவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்களா? இந்த சதி பற்றி இந்திய அரசாங்கம் என்ன கூறுகிறது என்ற கேள்விக்கு, “இந்திய அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகள் குறித்து சாத்தியமான நிறுவன சீர்திருத்தங்களை கவனமாகப் பார்க்கிறார்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“