பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் அல்லது பிரதமர் பதவியில் ஆர்வம் இல்லை என்று செவ்வாய்க்கிழமை கூறினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க் கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் பெரிதாக இல்லை, மக்களுக்காக அவற்றை மறைக்க முடியாது என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘இந்தியா’ (INDIA) (இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி) என்று பெயர் சூட்ட எதிர்க்கட்சிகளின் 26 உறுப்பினர்கள் குழு முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதற்கிடையில், பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் அல்லது பிரதமர் பதவியில் ஆர்வம் இல்லை என்று கூறினார். மேலும், “மாநில அளவில் எங்களில் சிலருக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நாங்கள் அறிவோம்; இவை கருத்தியல் சார்ந்தவை அல்ல” என்றும், “மக்களின் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு அவை பெரிதாக இல்லை என்றும் அவர் கூறினார். கார்கே மேலும் கூறுகையில், நாங்கள் 26 கட்சிகள், 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பா.ஜ.க தனித்து 303 இடங்களைப் பெறவில்லை, கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்திக்கொண்டு அவற்றை நிராகரித்தது. டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அந்த கட்சித் தலைவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் ஓடி பழைய கூட்டாளிகளுடன் ஒட்டுப்போடுகிறார்கள்” என்றார். மேலும், எதிர்க்கட்சிகள் கூட்டம் அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்டது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"