Khushboo Sundern : தனது முன்னாள் கட்சிக்கு எதிரான கடுமையான தாக்குதலுக்கு இடையில், பாஜகவில் சேர்ந்துள்ள குஷ்பூ சுந்தர், காந்திகள் "தாங்களாகவே கட்டியெழுப்பப்பட்ட குழிலிருந்து வெளியே வர வேண்டும்" என்றார். முன்னாள் தேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, காந்திகளுக்கும் பிற கட்சிகளுக்கு இடையில் உள்ள பல கூறுகளை குற்றம் சாட்டினார்.
“காந்திகள் தாங்களாகவே கட்டியெழுப்பப்பட்ட குழிலிருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் குழியை வெடிக்காத வரை, தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் எதிர்க்கட்சியிலும் தங்களைக் காண மாட்டார்கள். இது அவர்கள் நினைக்கும் ஒரு கட்டுக்கதை… நாட்டை ஆளுவதை மறந்துவிடுங்கள்… அவர்கள் எப்போதுமே எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்ற தவறான நம்பிக்கையின் கீழ் வாழ்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாக கூட இருக்க மாட்டார்கள், ”என்று குஷ்பு சுந்தர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
2014 ல் காங்கிரசில் சேர திமுகவை விட்டு வெளியேறிய குஷ்பு கடந்த திங்கள்கிழமை (12.10.20) பாஜகவில் சேர்ந்தார். கடந்த காலங்களில் அவர் கடுமையாக தாக்கிய பாஜகவில் இப்போது இணைந்துள்ள அவர், கட்சியில் தனது பங்களிப்பு குறித்து பதிவு செய்தார். “ நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன், கற்றுக் கொள்ளாமலும் இருக்கிறேன்” என்று கூறினார், “அதை கையாள முடியும்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள் என்பதை காங்கிரஸ் ஆராய விரும்பவில்லை என்று குற்றம் சாட்டிய குஷ்பு, கட்சியை விட்டு வெளியேற யார் காரணம்? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதக கூறினார். “எனது கடிதத்தைப் படித்தவர்களுக்கு நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று தெரியும். நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று உயர் இடத்திற்கும் தெரியும். நான் அவர்களின் பெயரிட வேண்டியதில்லை, ”என்று தெளிவுப்படுத்தினார்.
சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில், குஷ்பு “கட்சிக்குள்ளேயே உயர்ந்த மட்டத்தில் அமர்ந்திருக்கும் சிலர், கட்சியில் யதார்த்தத்துடனோ அல்லது பொது அங்கீகாரத்துடனோ எந்த தொடர்பும் இல்லாதவர்கள் விதிமுறைகளை ஆணையிடுகிறார்கள், கட்சிக்கு வேலை செய்ய விரும்பிய என்னைப் போன்றவர்கள் நேர்மையாக தள்ளப்படுகிறார்கள், ஒடுக்கப்பட்டது போல” என குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணம் "அரசியல்" என்றும், எந்தவொரு குறிப்பிட்ட தலைவரின் பெயரையும் தான் கூற விரும்பவில்லை என்றார். ஏனெனில் அவர் யார் மீது சேறு பூச விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
“காங்கிரசின் ஒரு அங்கமாக இருப்பவர்களும், காங்கிரஸை உருவாக்கியவர்களும் ஏன் வெளியேறுகிறார்கள்? அவர்களை சந்தர்ப்பவாதிகள் என்று கூறி பழியை சுமத்த விரும்புகிறார்கள். அவர்கள் செய்வதை ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை… எங்கே கடுமையாக தவறு நடக்கிறது, அதை கட்சி கவனிக்கவில்லை. அவர்கள் ஒரு நம்பகமான உலகில் வாழ்வதால், அவர்கள் தாங்களாகவே உருவாக்கிய ஒரு குழியில் வாழ்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியே வர விரும்பவில்லை, ”என்றார்.
கட்சியின் செயல்பாடுகள் குறித்து அக்கறை காட்டிய மூத்த தலைவர்களின் குழுவை காங்கிரஸ் தலைமை கையாள்வதை குஷ்பு கேள்வி எழுப்பினார். "நான் பாஜகவை நோக்கிச் சென்றதால் நான் சந்தர்ப்பவாதி என்று நீங்கள் கூறலாம். இந்த தலைமை பொறுப்பேற்பதற்கு முன்பே காங்கிரசின் ஒரு பகுதியாக இருந்த 23 தலைவர்கள் பற்றி பேசுங்கள். அவர்கள் ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளனர். அதை கட்சி கவனித்தா?
“காங்கிரஸ் கட்சி மக்களுக்காக கட்டப்பட்டது, அது ஒரு தனியார் சொத்து அல்ல.நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் மக்களால் கட்டப்பட்டது, ”என்று குஷ்பு கூறினார்.
குஷ்பு வெளியேற முடிவு செய்தபோது காங்கிரஸைச் சேர்ந்த யாரும் அவரை அணுகவில்லையாம். "மக்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் சிந்திக்க விரும்பவில்லை," என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, பாஜகவிலும் மனதில் பட்டதை தைரியத்துடன் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, “
கடந்த காலங்களில் சில விஷயங்களில் கட்சி வரியிலிருந்து பேசினேன்.உண்மையை பேசுவதில் நான் உறுதியாக இருப்பேன். பாஜகவுக்கு நான் எப்படிப்பட்ட நபர் என்று தெரியும்… எனக்கு என்ன மாதிரியான மனநிலை இருக்கிறது. என்னால் அதை கையாள முடியும். ”
பாஜக மீதான தனது முந்தைய தாக்குதல்களில், எதிர்க்கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்றும் அது தனது கடமை என்றும் கூறினார். "நான் அதை மறுக்கவில்லை, நான் பேசியது எனக்கே சொந்தம் என்று குஷ்பு கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil