Advertisment

விகாஷ் துபே மரணம் விசாரணைக் குழுவில் முன்னாள் டிஜிபி: சுப்ரீம் கோர்ட் அனுமதி

நீதிபதிகள்: ஒரு வழக்கு பிரபலமடைந்து விட்டால்,  உச்சநீதிமன்றம் குற்றவியல் விசாரணையை கண்காணிக்கும் என்று அர்த்தமல்ல.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விகாஷ் துபே மரணம் விசாரணைக் குழுவில் முன்னாள் டிஜிபி: சுப்ரீம் கோர்ட் அனுமதி

Ananthakrishnan G , Avaneesh Mishra

Advertisment

விகாஸ் துபே என்கவுன்டர் தொடர்பாக அமைக்கப்பட்ட  உண்மைக் கண்டறியும் குழுவில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி எஸ் சவுகான், முன்னாள் டிஜிபி கே எல் குப்தா  ஆகிய இருவரை பரிந்துரைக்கும் வரைவு அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.

ஏப்ரல் 1998 முதல் டிசம்பர் 1999 வரை, குறிப்பாக கல்யாண் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ், உத்திர பிரேதேச மாநில டிஜிபியாக பணியாற்றியவர் குப்தா.  சில நாட்களுக்கு முன்பு,  தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய குப்தா, விகாஸ் துபே என்கவுன்டரில் காவல்துறையை  சந்தேகிப்பது சரியல்ல என்று கூறினார்.

மாநில அரசு பரிந்துரைத்த பெயர்களை ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம், "64 கிரிமினல் வழக்குகள் இருந்தபோதிலும்,  விகாஸ் துபேவால் எவ்வாறு ஜாமீன் (அ) பரோல் பெற முடிந்தது என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி சவுகான் தலைமயிலான விசாரணைக் குழு ஆராய வேண்டும். இது அரசு அதிகாரிகளின் பங்கு என்ன? இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்று நாங்கள் கருதுகிறோம்," என்று நீதிபதிகள் ஏ எஸ் போபண்ணா,  வி ராமசுப்ரா-மேனியன் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே  தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.

விசாரணையை உச்சநீதிமன்றம்  கண்காணிக்காது என்று கூறிய நீதிபதிகள், " ஒரு வழக்கு பிரபலமடைந்து விட்டால்,  உச்சநீதிமன்றம் குற்றவியல் விசாரணையை கண்காணிக்கும் என்று அர்த்தமல்ல," என்றும் தெரிவித்தனர்.

விகாஸ் துபே என்கவுன்டர் குறித்து இந்தியா டுடே விவாத நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கள்  குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் குப்தா கூறுகையில்,“விசாரணைக் குழுவில் பெயர் பரிதுரைக்கப்பட்டவுடன், அதன் செயல்முறை குறித்து அதிகம் பேசுவது சரியாக இருக்காது. பேசுவதை தவிர்த்து  வேலையில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். விசாரணைக்கு ஒருதலைப்பட்சமின்றி பொதுத்தன்மை, மற்றும் நியாயமாக  இருப்போம்” என்று தெரிவித்தார்.

என்கவுன்டர் நடப்பதற்கு முன்பாக, அங்குள்ள  சுங்கச்சாவடிகளில் ஏன் பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன ? ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்துக்கு  துபே எப்படி/ஏன்/எதற்கு மாற்றப்பட்டார்? இறுதியாக, அவர் பயணித்த எஸ்யூவி  வாகனம் எப்படி விபத்தை சந்தித்தது? போன்ற பல்வேறு கேள்விகளை விவாத  நிகழ்ச்சியில் குப்தா எதிர்கொண்டார்.

குப்தா, “ இதுபோன்ற புலனாய்வு விசாரணை செய்ததற்கு முதலில் நான் ஊடகங்களுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் உஜ்ஜைனிலிருந்து (துபே பிடிபட்ட இடத்தில்) உத்திரபிரதேசம்  வரை வாகனத்தைப் பின்தொடர்ந்தீர்கள். அவருடைய சொந்த குடும்ப உறுப்பினர்கள் கூட அவ்வாறு செய்யவில்லை. பொதுவாக, சுங்கச்சாவடிகள் மற்றும் தடுப்பு நிலையங்களில், போலீஸ் வாகனங்கள் எந்தவிதக் கட்டுப்பாடுகள் இன்றி கடந்து  செல்ல அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் சரிபார்க்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் இ- பாஸ் சோதனை போன்ற காரணங்களுக்காக மற்ற வாகனங்கள் 5-10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம். அதை ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டு பரபரப்பை உருவாக்கிக் கொள்கின்றன" என்று தெரிவித்தார்.

எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். முதலில், விகாஸ் துபேவால் கொல்லப்பட்ட எட்டு காவல்துறையினருக்கு  உங்களால் ஏதேனும் செய்ய முடிந்ததா? அவர் எங்கிருந்து பல ஆயுதங்களை சேகரித்தார்? அவர் எப்படி தனது வீட்டை ஒரு ஆயுத தொழிற்சாலையாக மாற்றினார்?  என்ற கேள்வியையும் அவர் நிகழ்ச்சியில் எழுப்பினார்.

துபே என்கவுன்டர் உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவில் நியமனம் தொடர்பாக  எந்தவொரு எழுத்துப்பூர்வ உத்தரவும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறிய குப்தா, "  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்ட  சூழ்நிலை முற்றிலும் வேறாக இருந்தது. பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முன்னாள் காவல் அதிகாரி என்ற அளவில் சில விசயங்களைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தற்போது நிலை முற்றிலும் வேறு. காவல்துறையினரின் செயல்பாடுகள்  இந்த விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது. விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

 

முன்னதாக , ஓய்வுபெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஷி காந்த் அகர்வால் தலைமையில்  உ.பி. அரசு  ஒரு  நபர் விசாரணைக் குழுவை (one-member panel) அமைத்தது . உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, முன்னாள் காவல்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய விரிவான விசாரணைக் குழுவை ஏற்படுத்துமாறு உச்சநீதிமன்றம்  மாநில அரசை கேட்டுக் கொண்டது.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டினால் விகாஸ் துபேயின் ஐந்து கூட்டாளிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், “மாநில அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, இந்த வழக்கு தொடர்பான எந்தவொரு சம்பவத்தையும் சுதந்திரத் தன்மையோடு விசாரிக்க கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தது.

கமிஷன் லக்னோவில் அமர்ந்து விசாரணை மேற்கொள்ளும் என்றும், செயலக உதவியை  மத்திய அரசு வழங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.விசாரணைக் குழு  டெல்லியில் இருந்து  பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் கன்ஷ்யம் உபாத்யாய் கோரிக்கையை, ​​நீதிமன்றம்  நிராகரித்தது. "ஆதாரங்கள்  லக்னோவில் இருக்கையில், கமிஷன் ஏன் டெல்லியில் அமர வேண்டும்?" என்று பதிலளித்தது.

மனுதாரர்கள் மாநிலத்தில் நடந்த மற்ற என்கவுன்டர் கொலைகள் பற்றி குறிப்பிட்டபோது, ​​தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே,  துஷார் மேத்தா பக்கம் திரும்பி, “உ.பி.யில்  இதுபோன்ற சம்பவங்கள்  மீண்டும்  நிகழா வண்ணம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment