Advertisment

ட்விட்டரில் காக்கை படங்களை வெளியிட்ட கிரண்பேடி: நிறவெறி விமர்சனம் என சர்ச்சை

Kiran Bedi: கிரண்பேடியின் பதிவுக்கு முதல்வர் தரப்பினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court, Kiran Bedi Power Stayed, கிரன் பேடி அதிகாரம் ரத்து, சென்னை உயர் நீதிமன்றம்

Madras High Court, Kiran Bedi Power Stayed, கிரன் பேடி அதிகாரம் ரத்து, சென்னை உயர் நீதிமன்றம்

Kiran Bedi VS Narayanasamy: கிரண்பேடி அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார். காக்கை படங்களை அவர் ட்விட்டரில் பதிவிட்டதை, புதுவை முதல்வர் நாராயணசாமி பற்றிய நிறவெறி விமர்சனமாக சமூக வலைதளங்களில் சாடுகிறார்கள்.

Advertisment

புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளை செய்வதில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடி இடையூறு செய்வதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி புகார் கூறி வருகிறார். இதையொட்டி கிரண்பேடியை கண்டித்து கடந்த 13-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

6-வது நாளாக இன்றும் (பிப்ரவரி 18) அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பொதுமக்கள் முன்னிலையில் திறந்த மன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் பேசி முடிவு செய்யலாம். நாள், நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று முதல்வர், அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சவால் விடுத்தார்.

இந்த சவாலை எற்றுக்கொள்வதாக நாராயணசாமி அறிவித்தார். அதன்படி இருவரும் சந்தித்து பேச இருக்கிறார்கள். இதற்கிடையே நாரயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிற ரீதியாக கிரண்பேடி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊடகத்திலிருந்து ஒருவர் என்னிடம் தர்ணாவும் யோகாவா? என்ற ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்டார். அதற்கு நான், ஆமாம்... அது எதற்காக அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் சார்ந்தது. எந்தவிதமான ஆசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், எந்தவிதமான சத்தத்தை எழுப்பினீர்கள் என்பதைப் பொறுத்தது'' என்று கூறி இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கும் படத்தைப் பதிவிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கிரண்பேடியின் பதிவுக்கு முதல்வர் தரப்பினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் நாராயணசாமியை நிற ரீதியாக விமர்சித்திருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

முதல்வர்-ஆளுனர் மோதல் விவகாரம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Narayanasamy Kiran Bedi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment