காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்! - பிரதமருக்கு கிரண் பேடி கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது அவசியம் என கிரண்பேடி கடிதம்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என்று புதுச்சோி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

உச்சநீதிமன்றம் விதித்த 6 ஆறு வார கால கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைத்து கட்சிகளும் போராட்டக் களத்தில் குதித்துள்ளன. நாளை (ஏப்ரல் 3), ஆளும்கட்சியான அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘காவிரி நீா் முழுமையாக கிடைக்காததால், புதுச்சோி மாநிலத்தின் காரைக்கால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் காவிாி மேலாண்மை வாாியம், காவிாி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டியது அவசியம். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேலாண்மை வாாியம் அமைக்க உாிய துறைக்கு அறிவுருத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதுச்சேரி அரசுக்கும், கிரண் பேடிக்கும் எப்போதும் மோதல் போக்கே நீடித்து வந்த நிலையில், தற்போது அரசுக்கு ஆதரவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

×Close
×Close