ரூ 3 லட்சம் வரை கடன், 4% வட்டி: விவசாயிகளுக்கு கிசான் கார்டு சலுகைகள்

கிஸான் கடன் அட்டை பயன்தாரர் சரியான நேரத்தில் தனது கடனுக்கான மாத தவனையை செலுத்தினால், இந்த அட்டையின் கடன் வரம்பு ரூபாய் 3 லட்சம் வரை அதிகரிக்கப்படும்

By: Updated: March 4, 2020, 08:41:29 AM

விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ 3 லட்சம் வரை கடன், 4 சதவீத வட்டி உள்ளிட்ட எண்ணற்ற சிறப்பு அம்சங்களுடன், கிஷான் கடன் அட்டை திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கிவைத்தார்.

PM-KISAN திட்டத்தின் கீழ் அனைத்து விவசாய பயனாளர்களுக்கும் கிஸான கடன் அட்டை (Kisan Credit Cards) விநியோகிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தின் சித்திரகூட் பகுதியில் துவங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியக இந்தியா முழுவதும் சுமார் 25 லட்சம் PM-KISAN பயனாளிகளுக்கு கிஸான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் உள்ள வங்கி கிளைகளுக்கு இந்த கிஸான் அட்டைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தனது கரங்களாலேயே இந்த அட்டையை விழா மேடையில் வழங்கினார்.

கிஸான் கடன் அட்டை திட்டத்தின் பயன்கள்

1. இந்த கிஸான் கடன் அட்டை திட்டம் விவசாயிகளுக்கு குறுகிய கால கடனை 4 சதவிகித வட்டியில், சரியான நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் வழங்குகிறது.

டெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் வன்முறை… பூர்வீகமற்றவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

2. அரசுடமையாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் படி, விவசாயிகள் சரியான நேரத்தில் காலம் தாழ்த்தாது கடனை திரும்ப செலுத்தி விட்டால் அவர்களது கடனுக்கான வட்டி விகிதம் 3 சதவிகிதம் என தள்ளுபடி செய்யப்படும். அதே சமயம் காலம் தாழ்த்தி கடனை திரும்ப செலுத்தினால் கடன் தொகைக்கு வங்கி 7 சதவிகிதம் வட்டி வசூலிக்கும்.

3. கிஸான் கடன் அட்டை பயன்தாரர் சரியான நேரத்தில் தனது கடனுக்கான மாத தவனையை செலுத்தினால், இந்த அட்டையின் கடன் வரம்பு ரூபாய் 3 லட்சம் வரை அதிகரிக்கப்படும்.

4. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை.

5. இந்த அட்டை வைத்துள்ள பயனாளர்களிடமிருந்து வங்கிகள் கடனுக்காக குறைந்த வட்டியே வசூலிக்கும்.

6. சாகுபடி செலவு மற்றும் அறுவடைக்கு பிந்தைய செலவுகளை ஆகியவற்றை கணக்கிட்டு, முதல்முறை கடனை தொகையை வங்கி அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள்.

7. குறைந்த வட்டியில் கடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல் கடன் அட்டையின் மூலம் கடன் பெற்றுள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிற்களுக்கும் பயிற் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்கப்படும்.

8. கடன் அட்டை கணக்கில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணத்திற்கு கூடுதல் வட்டியும் வழங்கப்படும்.

சுயதணிக்கை செய்துகொள்ளும் கலை – பண்பாட்டு உலகம் !

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Kisan credit card farmers can get up to rs 3 lakh loan 4 percent interest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X