Advertisment

கந்துவட்டிக்கு விடை கொடுங்கள்: கிசான் கிரெடிட் கார்டு பெறும் முறை இங்கே

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே கிசான் கிரெடிட் கார்டில் (கே.சி.சி) புதிய வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
கந்துவட்டிக்கு விடை கொடுங்கள்: கிசான் கிரெடிட் கார்டு பெறும் முறை இங்கே

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே கிசான் கிரெடிட் கார்டில் (கே.சி.சி) புதிய வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

கடந்த 1998 ஆண்டு, தொடங்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு விவசாயிகள், தனிநபர், உரிமையாளர்-விவசாயிகள்,விவசாய பங்குதாரர், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்புக் குழு விவசாயிகள், கடல் மீனவர்கள், கோழி, பால் மற்றும் மகளிர் குழுக்கள் ஆகியோருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் ஒரு லட்சம் வரை கடன் பெறலாம். கந்துவட்டிக்கு விடை கொடுக்கும் கிசான் கிரெடிட் கார்டு பெறும் முறை இங்கே

கிசான் கிரெடிட் கார்டு புதிய வட்டி விகிதம்:

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கிசான் யோஜனாவின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த முயற்சியின் பலனாக நாடு முழுவதும் தற்போது பி.எம். கிசான் திட்டத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளதுடன், கிராமப்புறங்களில் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மூலம் விவசாயிகளுக்கு கே.சி.சி வழங்கும் பணியில் நடைபெற்று வருகிறது.

மேலும் கே.சி.சி திட்டத்தின் கீழ் கடன் பெறும், விவசாயி ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற விகிதத்தில் ஒரு வருடம் அல்லது உரிய தேதிக்குள் வட்டி அல்லது அசல் செலுத்த வேண்டும். உரிய தேதிகளுக்குள் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், கிசான் கிரெடிட் கார்டு விகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும். இதில் பயிர்கள் கடன்கள் பெற்றுள்ள விவசாயிகள், எதிர்பார்க்கப்பட்ட அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் காலத்திற்கு ஏற்ப கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

கிசான் கிரெடிட் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க, பல நிதி நிறுவனங்கள் உள்ளன. அவ்வாறு கே.சி.சி ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை இப்போது பார்க்கலாம்:

  1. நீங்கள் கடன் அட்டையைப் பெற விரும்பும் நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. கிடைக்கக்கூடிய கிரெடிட் கார்டுகளின் பட்டியலிலிருந்து கிசான் கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்து, ‘விண்ணப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்க.
  3. தொடர்ந்து ஸ்கிரீனில் காண்பிக்கப்படும் படிவத்தில், முகவரி மற்றும் உடங்களின் தொடர்புடைய தகவல் உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
  4. அடுத்து முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், நீங்கள் ஒரு விண்ணப்ப குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள். இந்த குறியீட்டு எண் எதிர்கால இந்த கேசிசி தொடர்பான கேள்விகள் மற்றும் குறிப்புகளுக்கு பயன்படுத்தப்படும்.

மேலும், உங்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்ப படிவம் செயல்முறைக்கு வர பொதுவாக 3 முதல் 4 வேலை நாட்கள் ஆகும். உங்கள் விண்ணப்ப படிவம் சரிபார்ப்பு செயல்முறைக்கு சென்றவுடன் நிதி நிறுவனம் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

கிசான் கிரெடிட் கார்டிற்கான முக்கிய ஆவணங்கள்:

இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கு, அடையாளச் சான்று (ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் ஐடி), முகவரி ஆதாரம், சொத்து ஆவணம், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனம் பெறக்கூடிய வேறு எந்த சிறப்பு ஆவணங்களையும் (பாதுகாப்பு பி.டி.சி போன்றவை) நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கிசான் கிரெடிட் கார்டின் வரம்பு என்ன?

கிசான் கிரெடிட் கார்டில் குறைந்த வரம்பு ரூ. 10,000 முதல் ரூ. குறு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரையும், மற்ற அனைத்து விவசாயிகளும் முன்மொழியப்பட்ட பயிர் முறை மற்றும் நிதி அளவைப் பொறுத்து கடன் வரம்புகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கடனுக்கு யார் தகுதியானவர்கள்?

எஸ்பிஐ- www.sbi.co.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, உரிமையாளர்-விவசாயிகள், குத்தகைதார விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பங்குதாரர்கள் போன்ற அனைத்து விவசாயிகளும், ஒற்றை ஹோல்டிங் குழுக்கள் (எஸ்ஜிஹெச்) அல்லது கூட்டு உழவர் குழுக்கள், விவசாயிகள் உட்பட குத்தகைதாரர்கள் தகுதியானவர்கள் கிசான் கிரெடிட் கார்டு யோஜனாவின் கீழ் கிசான் கிரெடிட் கார்டு கடன் பெறாலாம்.

Pm Kisan Kisan Credit Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment