Advertisment

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி டெல்லியில் படுகொலை

சேலம் தொகுதி எம்.பியான 1991ம் ஆண்டு ரங்கராஜன் குமாரமங்கலம் நீதித்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். பிறகு அவர் பாஜகவில் இணைந்து வாஜ்பாயின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
kitty kumaramangalam

Mahender Singh Manral 

Advertisment

Kitty Kumaramangalam : முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் (68) டெல்லியில் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் பகுதியில் வசித்து வந்த நேற்று நள்ளிரவு அவருடைய வீட்டில் பணியாற்றும் பெண் உதவியுடன் மூன்று பேர் கொலை செய்துள்ளனர். அதில் ஒருவர் கிட்டி குமாரமங்கலம் வீட்டில் துணிகளை துவைக்கும் பணி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டியின் வீட்டிற்கு அருகே பணியாற்றும் ராஜூ லக்கனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு டெல்லியின் டி.சி.பி. இங்கித் பிரதாப் சிங் இது குறித்து பேசுகையில், “இரவு 11 மணி அளவில் அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் மஞ்சு என்பவர் அலைபேசியில் அழைப்பு விடுத்து இந்த கொலை குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

ராஜூவிற்கு சரியாக 9 மணிக்கு தகவல் அளித்த மஞ்சு, ராஜூ மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவருக்காக கதவை திறந்துள்ளார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் மஞ்சுவை தாக்கி தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். சத்தம் போட்டு உதவி கேட்க நினைத்த நேரத்தில் ராஜூவும் அவருடைய உதவியாளர்களும் கிட்டியை கொலை செய்துள்ளனர்” என்று கூறினார்.

வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துவிட்டு அவர்கள் தப்பித்த நிலையில், தன்னுடைய கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து வெளியே சென்று அக்கபக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார் மஞ்சு என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மஞ்சுவை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலத்திடம் அலைபேசியில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ராஜூவை கைது செய்துள்ள நிலையில் மீதம் உள்ள இரண்டு நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரி சிங் கூறியுள்ளார்.

சேலம் தொகுதி எம்.பியான 1991ம் ஆண்டு ரங்கராஜன் குமாரமங்கலம் நீதித்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். 93ம் ஆண்டு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பிறகு அவர் பாஜகவில் இணைந்து வாஜ்பாயின் அமைச்சரவையில் எரிசக்தி துறை அமைச்சராக பதவி வகித்தார். திருச்சிராப்பள்ளி எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அவர் வாஜ்பாயின் இரண்டு ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment