Advertisment

கேரள களமச்சேரி குண்டுவெடிப்பு, திட்டமிட்ட செயல்: தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அதிகாரிகள் தகவல்

கேரளத்தின் களமச்சேரியில் உள்ள யெகோவா விட்னெஸ்னெஸ் கிறிஸ்தவ கூடாரத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மூன்று குண்டுகள் வரை வெடிக்க வைக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
 blasts that rocked a convention centre in Kochi

இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்கள்.

கேரளத்தின் களமச்சேரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்கள்.
கேரளத்தின் களமச்சேரியில் உள்ள யெகோவா விட்னெஸ்னெஸ் கிறிஸ்தவ கூடாரத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மூன்று குண்டுகள் வரை வெடிக்க வைக்கப்பட்டன. இந்தக் குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் காயமுற்றனர்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு கூடியுள்ளனர். அப்போது இவர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்கள்.

மேலும் குண்டுவெடிப்புக்கு ஐஇடி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள், “மூன்று குண்டுவெடிப்புகள் காலை 9.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும், அடுத்த 10 நிமிடங்களில் மற்ற இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாகவும்” தெரிவித்தனர். இது குறித்து, கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப், “முதற்கட்ட விசாரணையில் அது ஐஇடி வெடிகுண்டு எனத் தெரியவந்துள்ளது, நாங்கள் அதை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து, “தேசிய புலனாய்வு முகமை மற்றும் கேரள காவல்துறையின் மூத்த அதிகாரிகள், “அந்த இடத்தில் கிடைத்த பொருள்களை பார்க்கும்போது இது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் டிபன் பாக்ஸ், கம்பி துண்டுகள், சூட்கேஸ் எச்சங்கள் என கிடைத்துள்ளன. இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது” என்றனர்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Kochi blasts: Premeditated act, likely use of IEDs, say investigators as they explore multiple angles

இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடந்துவருகின்றன. முன்னதாக வெள்ளிக்கிழமை (அக்.27) மலப்புரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி நடந்தது.
இந்தப் பேரணியில் காணொலி வாயிலாக முன்னாள் ஹமாஸ் தலைவர் காலீத் மெஷால் உரையாற்றியுள்ளார். இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் தற்போது விசாரணை நடத்திவருகின்றன.

அதே நேரத்தில், ஏஜென்சிகள் கேரளாவில் வளர்ந்து வரும் மத இயக்கங்களையும் ஆய்வு செய்கின்றன. மேலும், பாரம்பரிய மதங்களுக்கும் யெகோவா விட்னெஸ்னெஸ் போன்ற புதிய மதங்களுக்கும் இடையே உராய்வுகள் உள்ளன.
ஏனெனில் இந்த யெகோவா விட்னெஸ்னெஸ் போன்ற வழிபாடுகள் புதிதாக உள்ளன எனவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், “இந்த மாற்றம் கிராமப்புறங்கள் அல்லது ஏழை மக்களுக்கு மட்டும் அல்ல நிகழவில்லை. எர்ணாகுளம் போன்ற நகர்ப்புற மையங்களில் கூட, பணக்கார பாரம்பரிய தேவாலயங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட, தனிநபர்கள் இந்த புதிய மத அனுபவங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். பெரும்பாலும் தங்கள் சொந்த பாரம்பரிய நம்பிக்கையிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்கிறார்கள்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment