பெண் மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கு: நாடு முழுவதும் மருத்துவர்கள் 2-வது நாளாக போராட்டம்; நோயாளிகள் கடும் பாதிப்பு

மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சருக்கு சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக மாநில ஆர்.டி.ஏ-ன் தலைவர் டாக்டர் ஹர்தீப் ஜோகி தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சருக்கு சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக மாநில ஆர்.டி.ஏ-ன் தலைவர் டாக்டர் ஹர்தீப் ஜோகி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
doctors strike

கொல்கத்தாவில் 4 நாட்கள் முன் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி மற்றும் விரைவான விசாரணை கோரி, நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பிற மருத்துவர்கள் நேற்று செவ்வாய்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், மகாராஷ்டிராவில் வசிக்கும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை காலை காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஓ.பி.டி உள்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.  இருப்பினும் அவசரகால சேவைகள் தடையின்றி தொடரும் என்று மகாராஷ்டிரா மாநில குடியிருப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (மத்திய-MARD) தலைவர் டாக்டர் பிரதிக் தேபாஜே பிடிஐயிடம் தெரிவித்தார்.

டாக்டர் தேபாஜே கூறுகையில், காலை 9 மணி முதல், ஓ.பி.டி  (வெளிநோயாளி பிரிவுகள்)  சேவைகளை நிறுத்திவிட்டோம். இப்போது, ​​அவசரகால சேவைகள் மட்டுமே மாநிலம் முழுவதும் செயல்படுகின்றன,” என்று  கூறினார்.

தொடர்ந்து, கொல்கத்தா மருத்துவர் கற்பழிப்பு-கொலை சம்பவத்தைக் கண்டித்து resident மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சண்டிகரிலும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. 

Advertisment
Advertisements

ஆங்கிலத்தில் படிக்க:   Kolkata doctor rape-murder case: OPD services remain affected as doctors’ strike enters Day 2

 மருத்துவமனைகளில் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நாளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவர்கள் OPD சேவைகளை நிறுத்தினர்.

கொல்கத்தா கற்பழிப்பு-கொலை வழக்குக்கு எதிராக மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள டாக்டர்கள் சங்கம், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சருக்கு சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக மாநில RDA-ன் தலைவர் டாக்டர் ஹர்தீப் ஜோகி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: