கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து மர்மகும்பல் தாக்குதல்
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர்கள், மருத்துவர்கள் உட்பட போராட்டக்காரர்களை தாக்கி, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர்கள், மருத்துவர்கள் உட்பட போராட்டக்காரர்களை தாக்கி, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவுபணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
Advertisment
பிரேத பரிசோதனையில் அவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், புதன்கிழமை நள்ளிரவில், மேற்கு வங்கம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மக்கள், பொது இடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றவும், கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் நீதியை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளை வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
Advertisment
Advertisements
அப்போது ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர்கள், மருத்துவர்கள் உட்பட போராட்டக்காரர்களை தாக்கி, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
The vandalism of the protest site at R G Kar Medical College by goons in presence of Kolkata Police is reflective of the failed law & order in the state of West Bengal. Urge Hon'ble Governor of West Bengal to immediately intervene & ensure safety of all protesting students &… pic.twitter.com/KEgWKlk2dN
ஒரு மர்ம கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தாக்கப்பட்டனர், இதனால் பதறிப்போன அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தப்பி ஓடினர். அந்த மர்ம கும்பல், பயிற்சி மருத்துவர்பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கட்டிடத்திற்குள் நுழையவும் முயன்றனர். போலீசார் வாய்மூடி எதுவும் செய்யாமல் நின்றனர், என்று போராட்டக்காரர்களில் ஒருவரான என்ஆர்எஸ் மூத்த ரெசிடன்ட் மருத்துவர் சுபேந்து முல்லிக் குற்றம் சாட்டினார்.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, நள்ளிரவில், நூற்றுக்கணக்கான ஆண் கும்பல் வளாகத்திற்குள் நுழைந்து, எதிர்ப்பாளர்களையும் காவல்துறையையும் கூட திகைப்பில் ஆழ்த்தியது.
மருத்துவமனையின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு போலீஸ் வாகனங்களை அவர்கள் கற்களை வீசி தாக்கினர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, சிபிஐ குழு மருத்துவமனைக்குச் சென்று இந்த கொடூரமான குற்றம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.