“எங்கள் விடுதியில் இப்போது 17 பெண்கள் மட்டுமே இருக்கிறோம். ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு முன்பு வெவ்வேறு படிப்புகளைச் சேர்ந்த 160 ஜூனியர் பெண் டாக்டர்கள் இங்கு தங்கியிருந்தனர் ”என்று கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 24 வயதான நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவி ஒருவர் கூறினார்.
அந்த மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஜூனியர் டாக்டர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“மருத்துவ மாணவி கூறுகையில், “ஆகஸ்ட் 9 இந்த சம்பவத்திற்குப் பிறகு, பயிற்சி மருத்துவர்கள் விடுதியை விட்டுச் சென்றனர். சிலர் ஓரிரு நாட்கள் கழித்து திரும்பினர். ஆனால் ஆகஸ்ட் 14 இரவு மருத்துவமனை மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அதிகமான மாணவிகள் வெளியேறினர், ” என்றார்.
ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் பெண் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவிகளுக்கு ஐந்து விடுதிகள் உள்ளன.
ஆகஸ்ட் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், ஆகஸ்ட் 14ஆம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து சுமார் 700 ரெசிடென்ட் டாக்டர்களில் 30-40 பெண் மருத்துவர்களும் 60-70 ஆண் மருத்துவர்களும் மட்டுமே இப்போது வளாகத்தில் தங்கியுள்ளனர் என்று கூறினார்.
“அன்றிரவு (ஆகஸ்ட் 14) நாங்கள் மிகவும் பயந்தோம், அதை எங்களால் விளக்க முடியாது. இங்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த பல பெண் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை கும்பல் தாக்கியதால் எங்கள் விடுதியை நோக்கி ஓடி வந்து இரவு எங்களுடன் தங்கினர். அன்று இரவு நாங்கள் யாரும் உறங்கவில்லை” என்று இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் கூறினார்.
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் மேற்கு வங்க அரசை கடுமையாக விமர்சனம் செய்தது. மருத்துவமனையில் ஒரு கும்பல் கூடி, போராட்டக்காரர்களை தாக்கி, வளாகத்தை நாசப்படுத்தியபோது, “காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது” என்று கேட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு பாதுகாப்பு வழங்குமாறு சி.ஐ.எஸ்.எப்-க்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புருலியாவைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவி கூறுகையில், “சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் இப்போது மருத்துவமனையில் பாதுகாப்பிற்கு உள்ளனர். இப்போது, நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால் காவல்துறை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை, நாங்கள் எப்படி முற்றிலும் பாதுகாப்பாக உணருவோம்? கற்பழிப்பாளர்கள் மற்றும் கொலைகாரர்கள் என் அருகில் நின்று கொண்டு மருத்துவமனையில் வேலை செய்ய நாங்கள் விரும்பவில்லை,” என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: Kolkata Rape-Murder | Gripped by fear, women medicos left campus: ‘We are just 17 now in our hostel, 160 lived before August 9’
மறுபுறம், தாங்கள் பயந்தாலும், விடுதியில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று செவிலியர்கள் தெரிவித்தனர். “டாக்டர்கள் தங்கள் கடமையைத் தவிர்க்கலாம் அல்லது ஆண் மருத்துவர்கள் பெண் மருத்துவர்களின் கடமையைச் செய்யலாம், ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை.
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், இரண்டு செவிலியர் விடுதிகள் உள்ளன. நாங்கள் கடமைகளைச் செய்ய வேண்டியிருப்பதால் அங்கு தங்கி உள்ளோம். இதுபோன்ற பயங்கர சம்பவங்களுக்குப் பிறகும், நாங்கள் இரவு கடமைகளைச் செய்கிறோம், சில சமயங்களில் ஒரு வார்டில் தனியாக இருக்கிறோம். நாங்கள் இப்போது உண்மையில் பாதுகாப்து இல்லாதவர்களாக இருக்கிறோம், ”என்று 42 வயதான செவிலியர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.