Advertisment

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: வெளிவந்த புது வீடியோ- ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா?

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

author-image
WebDesk
New Update
Kolkata rape case new video

Kolkata rape-murder case

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisment

ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை, பெண் மருத்துவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே குற்றம் நடந்த இடத்தில் பலர் குவிந்ததாகக் கூறப்படும் வீடியோ வெளிவந்தது.

சம்பவம் நடந்த செமினார் ஹாலில் அப்போதைய கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ், அவரது வழக்கறிஞர் சந்தனு டே, கோஷின் தனி உதவியாளர், போலீஸ் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் ஆகியோர் அந்த வீடியோவில் இருக்கின்றனர்.

சுகாதார ஆட்சேர்ப்பு வாரியத்தில் உள்ள தடயவியல் மருத்துவத்தில் டெபாஷிஸ் சோம், தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டேடா எண்ட்ரீ அதிகாரி பிரசுன் சட்டோபாத்யாய் ஆகியோரும் வீடியோவில் காணப்படுகின்றனர்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஜெகநாத் சட்டோபாத்யாய் கூறுகையில், குற்றம் நடக்கும் இடத்தில் பலர் சுற்றித் திரிவதை வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. கற்பழிப்பு மற்றும் கொலை நடந்த கருத்தரங்கு அரங்கிற்குள் இவர்களை போலீசார் அனுமதித்தது ஏன்? ஆதாரங்கள் அழிக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது, என்றார்.

அவரது கருத்தை எதிரொலித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், வீடியோவில், குற்றம் நடந்த இடத்தில் ஏதோ நடப்பதை காணலாம். எல்லோரும் போலீஸ் முன்னிலையில் சுற்றித் திரிகிறார்கள். இதுபோன்ற குற்றச் சம்பவத்தை யாராவது பார்த்திருக்கிறார்களா? என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், போலீசார் விசாரணையில் நீதிமன்றம் திருப்தி அடையவில்லை. நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக முன்பே சொன்னோம்.

அந்தக் வீடியோவில் அப்போதைய முதல்வர் மற்றும் அவரது நண்பர்கள், ஜூனியர் டாக்டர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கருத்தரங்கு அரங்கிற்குள் இருந்ததைக் காட்டுகிறது. அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வீடியோவில் இருப்பவர்களை அடையாளம் கண்டு விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும், என்றார்.

ஆனால், இந்த கூற்றுக்களை நிராகரித்த கொல்கத்தா துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) இந்திரா முகர்ஜி, ‘கருத்தரங்கு அரங்கிற்குள் சிலர் நிற்பதால் ஆதாரங்களை சேதப்படுத்தியதாகக் கூறி மக்கள் சமூக ஊடகங்களில் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். குற்றம் நடக்கும் இடம் சுற்றி வளைக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

உடல் கண்டெடுக்கப்பட்ட கருத்தரங்கு அரங்கின் பகுதி திரைச்சீலைகளால் உடனடியாக மூடப்பட்டது. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் 40 அடி தூரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது சீல் வைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள பகுதி. இது சுமார் 10 அடி நீளமும் அகலமும் கொண்டது. ஆர்.ஜி.கர் டாக்டர்கள் உட்பட சிலர் அங்கு வந்திருந்தனர். ஆனால் சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, என்று அவர் கூறினார்.

எலும்பியல் மருத்துவம் பார்க்க நான் அன்று மருத்துவமனைக்கு சென்றேன். கருத்தரங்கு அரங்கிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். நிறுவனத்தின் புகார் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக உள்ளேன், என்று சந்தீப் கோஷின் வழக்கறிஞர் சாந்தனு டே ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கில் டாக்டர் கோஷ் தவிர, தேபாசிஷ் சோமிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Read in English: Kolkata rape-murder case: After new video, Opp says evidence erased; cops claim not of crime spot

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kolkata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment