சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டம் நடத்திய மருத்துவர்களின் கோரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் ஆதரிக்க வாய்ப்பில்லை, அது எப்படியும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, என்று மூத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அதன் முன் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியை 25% அதிகரிக்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மருத்துவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு அரசாணை கொண்டு வருவது தீர்வாகாது. வங்காளம் உட்பட 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (மொத்தம் 36) சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க சில வகையான சட்டங்கள் உள்ளன. ஆனாலும், வன்முறை சம்பவங்கள் குறித்து கேள்விப்படுகிறோம்.
பலாத்காரம், கொலைகள் எங்கு நடந்தாலும் நாட்டின் சட்டத்தின் மூலம்தான் தீர்வு காண வேண்டும். மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மட்டுமே உள்ளடக்கும், அது அனைத்தையும் உள்ளடக்காது. சிறந்த பாதுகாப்பு என்பது காலத்தின் தேவை. மேலும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்படுகிறது’, என்றார்.
/indian-express-tamil/media/media_files/KSJ7ceOF94JivMq8Ta02.jpg)
போராட்டம் நடத்தும் மருத்துவர்களின் கோரிக்கையை இந்த குழு பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் ஆராய்வார்கள் என்று அதிகாரி கூறினார். இந்தக் குழுவில் சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள்.
’நாங்கள் மாநிலங்களை குழுவில் கொண்டு வர விரும்புகிறோம், ஏனென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக சுகாதாரம் என்பது மாநிலம் சார்ந்தது. மாநிலங்கள் அதை பின்பற்றவில்லை என்றால், மத்திய அரசு அறிவுரைகளை வழங்குவதில் அர்த்தமில்லை. நீண்ட கால தீர்வுகளைக் கண்டறிய அனைவரையும் ஒன்றிணைக்க விரும்புகிறோம். மருத்துவ சங்கங்கள் குழுவிடம் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும், போராட்டம் நடத்தும் மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு’ என்று அதிகாரி வலியுறுத்தினார்.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு தழுவிய போராட்டத்திற்குப் பிறகு 2019 இல் ஒரு மசோதா வரைவு செய்யப்பட்டாலும், அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் கடுமையான விதிமுறைகளை 2019 வரைவு முன்மொழிந்தது. பிறகு தொற்றுநோய்களின் போது, தொற்றுநோய்கள் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து, சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்து, மத்திய அரசு ஒரு அவசரச் சட்டத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Read in English: Doctors’ strike: Health ministry unlikely to support new law to protect medical staff
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“