Advertisment

கொல்கத்தா பலாத்கார கொலை வழக்கு: 2 உதவிக் காவல் ஆணையர்கள், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

உதவிக் காவல் ஆணையர்கள் ஷகிர் உதீன் சர்தார், ரமேஷ் ஷா சவுத்ரி மற்றும் இன்ஸ்பெக்டர் ராகேஷ் மின்ஸ் ஆகியோர் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kolkata RG Kar Hospital

Kolkata rape murder case

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Advertisment

பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ஆகஸ்ட் 14 அன்று இரவு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர்கள், மருத்துவர்கள் உட்பட போராட்டக்காரர்களை தாக்கி, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு உதவிக் காவல் ஆணையர்கள் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் மருத்துவமனையில் பணியில் இருந்தபோது அலட்சியமாக இருந்ததாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவிக் காவல் ஆணையர்கள் ஷகிர் உதீன் சர்தார், ரமேஷ் ஷா சவுத்ரி மற்றும் இன்ஸ்பெக்டர் ராகேஷ் மின்ஸ் ஆகியோர் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெண் மருத்துவர் கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் கொல்கத்தா காவல்துறையின் உதவி சப்-இன்ஸ்பெக்டர்(ASI), இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜரானார்.

உதவி சப்-இன்ஸ்பெக்டர் அனூப் தத்திடம், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் உடனான அவரது உறவு குறித்தும், சம்பவம் நடந்த இரவு குறித்து அவருக்கு ஏதேனும் தெரிந்திருப்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் சஞ்சய் ராயின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.

மேலும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ், தொடர்ந்து ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை சிபிஐ முன் ஆஜரானார். அப்போது அவரது அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றியும், விசாரணையின் போது கருத்தரங்கு அறையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பழுதுபார்க்கும் பணி தொடங்கியது ஏன் என்றும் சிபிஐ அவரிடம் கேள்வி எழுப்பியது.

கோஷ் மீது கடமை தவறுதல் மற்றும் குற்றத்தை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Read in English: Kolkata rape murder case: Two ACPs, inspector suspended over RG Kar Hospital vandalism

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kolkata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment