அன்றிரவு, அவள் என் பெயரைச் சொல்லி அழுதிருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் இந்த கேள்வி இப்போது என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெரியும. அவளை ஏன் ஆர்.ஜி.கருக்கு அனுப்பினேன்?
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் தாய், கடந்த மாதம் நடந்த சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் பேசினார்.
புதன்கிழமை இரவில், கொல்கத்தாவில் உள்ள ஷியாம்பஜார் ஃபைவ் பாயிண்ட் கிராசிங்கில் நடந்த 2வது கட்ட ‘ரிக்ளைம் தி நைட்’ போராட்டத்தில் கொல்கத்தா மற்றும் வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
“அது (ஆர்.ஜி.கர்) ஒரு பெரிய மருத்துவக் கல்லூரி. அங்கே எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் மூவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்... அவள் மா மா என்று பலமுறை அழைத்திருக்கலாம்... அந்த அழுகை என் காதுகளுக்கு எட்டவே இல்லை. நான் அவளை அனுப்பவில்லை என்றால், அவள் இப்போது என்னுடன் இருந்திருக்கலாம். இந்தக் கேள்வித்தான் இப்போது தினமும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது என் மகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் உன்னைப் பெற்றிருக்கிறேன். இதுதான் உண்மை. என் குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை, தயவு செய்து என்னுடன் இருங்கள்... என் பக்கத்தில் இருங்கள். குற்றம் செய்தவர்கள் மற்றும் ஆதாரங்களை மறைக்க முயற்சித்தவர்கள்... அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும், என்று பயிற்சி மருத்துவரின் அம்மா முதன்முறையாக மேடையில் பொதுமக்களுக்காகப் பேசினார்
போராட்டங்களுக்கு முன்னதாக, கொல்கத்தா மற்றும் வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை அணைத்து, மெழுகுவர்த்திகளை ஏற்றினர்.
ஷியாம்பஜார் ஃபைவ் பாயிண்ட் கிராசிங், நியூ டவுனில் உள்ள பிஸ்வா பங்களா கேட், ஜாதவ்பூர் கிராசிங், சிந்திர் மோர் கிராசிங், பெஹாலா சாகர் பஜார் மற்றும் பிற பகுதிகளிலும் மக்கள் கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.
“நான் எந்தப் பேரணியிலும் பங்கேற்றதில்லை. எனக்கும் குழந்தைகள் இருப்பதால் இங்கு வந்துள்ளேன். என் மகளுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. அவளையும் இங்கு அழைத்து வந்திருக்கிறேன். இங்கிருந்து நான் முக்கிய கூட்டம் நடக்கும் ஷயாம்பஜாருக்குச் செல்கிறேன், ”என்று பெத்துன் கல்லூரிக்கு அருகில் நின்ற கோபால் சர்க்கார் கூறினார்.
ஆளுநர் மாளிகையிலும் விளக்குகளை அணைத்துவிட்டு,கவர்னர் சிவி.ஆனந்த போஸ் மெழுகுவர்த்தி ஏற்றியதைக் காண முடிந்தது.
”ஆகஸ்ட் 14ம் தேதி இரவு, என் கணவருடன் வந்தேன். ஆனால் இந்த முறை மகளையும் கொண்டு வர முடிவு செய்தோம். நாங்கள்மெழுகுவர்த்தியை ஏற்றினோம். ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை... என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனால் எனக்குத் தெரியும். இது காலத்தின் தேவை. நான் சொல்ல விரும்புவது அவ்வளவுதான். என் சுற்றுப்புறத்தில் இருந்து பலர் வந்திருந்தனர், ”என்று சுஷ்மா தாஸ் கூறினார்.
இருப்பினும், காரியாவில், மக்கள் கூடிய மற்றொரு இடத்தில், ஒரு இளைஞர் வீடியோ எடுத்து மக்களிடம் அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளைக் கேட்பதைக் கண்டு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மத்தபங்கா, கூச் பெஹாரில், சில போராட்டக்காரர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் காவல்துறை வந்து விரைவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
Read in English: Kolkata rape-murder victim’s mother joins protest: ‘Until I get justice for my child, please be with me… be on my side’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.