வைரலாகும் வீடியோ: மாமியாரை மாடியில் வைத்து சரமாரியாக அடித்த மருமகள்!

சம்பவம் நடந்த வீட்டை கண்டுப்பிடித்து  மூதாட்டியை தாக்கிய , கொடுமைக்கார மருமகளான ஸ்வப்னாவிடம் இருந்து மீட்டுள்ளனர்.

கொல்கத்தாவில்  வயதான மாமியர் ஒருவரை  மருமகள் ஒருவர், மாடியில் வைத்து சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சினிமாவில்  காட்டப்படும்  மாமியர் – மருமகள் சண்டை என்பது   பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும்  நிஜத்தில் ஏற்புடையதல்ல.  பெண்கள் தங்களுக்கு அமையும் மாமியார்களை அம்மா போலவும், மாமியார்கள் தங்களின் மருமகள்களை சொந்த பெண்ணை போல் பார்த்தால் போதும் பிரச்சனைகள் பறந்தோடும் என்று  ஏகப்பட்ட பட்டிமன்றங்கள்,  சிரிப்பு நிகழ்ச்சிகள், நாடகங்களில் காட்டப்பட்டுள்ளன.

ஆனால்,  கொல்கத்தாவில்  தன்னை கேட்காமல் பூ பறித்த ஒரே காரணத்திற்காக  சொந்த மாமியாரை பெண் ஒருவர்  சரமாரியாக அடிக்கும் வீடியோ பார்ப்பவர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.   75 வயதாகும் ஜோஷ்டா பவுல் என்ற மூதாட்டி தனது மகன் ரஞ்சித்துடன் வாழ்ந்து வருகிறார்.

ஜோஷ்டா பவுலின் கணவர் சமீபத்தில் தான் இறந்தார். இதனால்  தனது மகன் மற்றும் மருமகள் ஸ்வப்னா பவுல்  உடன் கடந்த சில மாதங்கள் ஜோஷ்டா தங்கி இருந்துள்ளார். இதனால், அவருக்கும் , அவரின் மருமகள் ஸ்வப்னாக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. சில சமயங்களின் ஸ்வப்னா கணவர் இல்லாத நேரத்தில்   ஜோஷ்டாவை கண்டபடி அடித்தும் உள்ளார்.

இந்நிலையில் தான், சம்பவதன்று   ஜோஷ்டா மாடியில் இருக்கும் செடியில் பூ பறிக்க சென்றுள்ளார். அப்போது மேலே வந்த மருமகள் ஸ்வப்னா , தன்னை கேட்காமல் எப்படி பூ பறிக்கலாம் என்று ஆத்திரத்தில் மூதாட்டியை கடுமையாக அடித்துள்ளார். கழுத்தை நெறித்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதை அந்த வீட்டில் இருந்த சிலர், மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். பின்பு அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனைப் பார்த்த கொல்கத்தா காவல் துறையினர்  சம்பவம் நடந்த வீட்டை கண்டுப்பிடித்து  மூதாட்டியை தாக்கிய , கொடுமைக்கார மருமகளான ஸ்வப்னாவிடம் இருந்து மீட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடித்துள்ளனர். வயதானவா் என்று கூட பாா்க்காமல் தனது மாமியாரை மிகவும் கொடூரமான முறையில் ஸ்வப்னா   தாக்கி இருப்பது வீடியோ பார்ப்பவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close