கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குறைந்தது இரண்டு பயணிகளுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தனது வீரர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
மீட்பு நடவடிக்கைகளில் பணிபுரிந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத் துறை வலியுறுத்திய சில மணி நேரங்களில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் இந்த உத்தரவு வெளியானது.
துபாயிலுருந்து 190 பேருடன், கோழிக்கோடு டேபிள் டாப் ஓடுபாதையில் வந்த விமானம், 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உடைந்தது. ஓடுபாதையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த தொழில்துறை பாதுகாப்பு படையின் உதவி சப் இன்ஸ்பெக்டர் அஜித் சிங், பயணிகள் மீட்பு நடவடிக்கையை முதலில் முடிக்கிவிட்டார் என்று சிஐஎஸ்எஃப் கூறியது.
" மீட்பு பனியின் போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவி புரிந்த எங்கள் வீரர்களை அடையாளம் கண்டு வருகிரோம்" என்று சிஐஎஸ்எஃப் சிறப்பு இயக்குநர் ஜெனரல் எம்.ஏ கணபதி தெரிவித்தார்.
முன்னதாக, மீட்பு பணியாளர்களும், விமான விபாத்தில் காயமடைந்தவர்களும் கொரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு, கேரளா சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
காயமடைந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவருமே இதேபோன்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்தது.
விமான நிலையம் அமைந்துள்ள மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி,ஏற்கனவே அதிக கொரோனா ஆபத்தைக் கொண்ட ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக செயல்பட்டு வந்தது.
8, 2020
வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக 190 பயணிகளை ஏற்றிச் சென்ற துபாய்-காலிகட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரண்டாக பிளந்தது. பைலட்-இன்-கமாண்ட் கேப்டன் தீபக் சாத்தே, இணை விமானி அகிலேஷ் குமார் உட்பட 18 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
விமான விபத்து குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினார். மீட்பு பணிகளையும், விபத்தில் படுகாயமடைந்தவர்களையும் இன்று பினராயி விஜயன் இன்று நேரில் சந்தித்தார்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தை, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோழிக்கோடு விமான விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் மரணித்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.
கோழிக்கோடு விமான விபத்திலும், மூணாறு நிலச்சரிவிலும் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil