Advertisment

அம்மாவுக்கு கடைசி மெசேஜ்: கேரளா விபத்தில் பலியான விமானி, இணை விமானி குடும்பத்தினர் தவிப்பு

kozhikode plane crash: 29 வயதான மேகா, இன்னும் பதினைந்து நாட்களுக்குள் குழந்தையை ஈன்றெடுக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
அம்மாவுக்கு கடைசி மெசேஜ்: கேரளா விபத்தில் பலியான விமானி, இணை விமானி குடும்பத்தினர் தவிப்பு

Jignasa Sinha , Vivek Deshpande

Advertisment

அது ஒரு வழக்கமான நாளாக இருந்திருந்தால், விமானத்தை இயக்கிய கேப்டன் தீபக் வசந்த் சாத்தே, 83 வயதில் அடியெடுத்து வைக்கும் தனது தாயுடன் தொலைபேசியில்  உரையாடி இருந்திருப்பார். கடந்த வாரம் இருவருக்கும் இடையேயான அந்த தொலைபேசி உரையாடலில்,'கொரோனா தொற்று பரவுகிறது, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்', அம்மா! என்ற கோரிக்கை தான் தாய்- மகன் இருவருக்குமான கடைசி வார்த்தைகளாக மாறியுள்ளன.

விமான விபத்தில் பலியான, இணை விமானி அகிலேஷ் ஷர்மாவின் மனைவி, தனது  முதல் குழந்தையை சில நாட்களுக்குள் பிரசவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல், துபாயிலுருந்து விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தனது மனைவி  மேகாவிடம் பேசிய  அகிலேஷ் ஷர்மா, "  பத்திரமாக பார்த்துக் கொள், நான் கேரளாவை அடைந்தவுடன் மீண்டும் உங்களை அழைப்பேன்" என்று தெரிவித்தார்.

இரவு 8 மணியளவில், சாந்தே, 59, ஷர்மா, 32, ஆகியோர் இறந்துவிட்டனர். வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக 190 பயணிகளை ஏற்றிச் சென்ற துபாய்-காலிகட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

அகிலேஷ் ஷர்மாவின் இறப்பு குறித்து மேகாவுக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் .

நாக்பூரில் வசிக்கும் லீலா, வசந்த் சாத்தே (ஓய்வுபெற்ற ராணுவ வீரர்), தற்போது  தங்கள் இரு மகன்களையும் இழந்துள்ளனர். இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்து பணி புரிந்து வந்த அவர்களது மற்றொரு மகன், விகாஸ், 1980 களின் முற்பகுதியில் ஒரு விபத்தில் இறந்தார். தீபக் வசந்த் சாத்தே-வும் முந்தைய கால கட்டங்களில் ஒரு கடுமையான பைக் விபத்தில் இருந்து உயிர் தப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்திய விமானப் படையின் முன்னாள் விங் கமாண்டரான  சாத்தே, பணியில் இருந்தபோது ஏவுகணை ஸ்குவாட்ரன் பிரிவுக்கு தலைமை தாங்கினார் என்பது தங்கள் வாழ்க்கையின் மிகவும் பெருமைக்குரிய தருணம் என்று தாயார் லீலா சாத்தே  கூறினார். மேலும், “நாங்கள் ராணுவ வீரர்களின் குடும்பம். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் முதலிடம் பிடித்தவர் ,  திண்டுக்கல் விமானப்படை அகாடெமியில் ஸ்வார்ட் ஆப் ஹானர்  வாளை பெற்றவர்” என்றும் தெரிவித்தார்.

மனைவி சுஷ்மா, மகன்கள் சாந்தனு,தனஞ்சய் ஆகியோருடன் தீபக் வசந்த் சாத்தே வசிந்து வந்தார்.  மகன்கள் இருவரும் ஐ.ஐ.டி-பம்பாயின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

ஷர்மாவின் தந்தை துளசிராம்(62), "வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்திகள் மூலம் தான், என்ன நடந்தது என்பதை அவர்கள் உணர்ந்ததாக தெரிவித்தார்.

“என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனது இளைய மகன் லோகேஷிடம் ஏர் இந்தியா அதிகாரிகளை அழைத்து அகிலேஷை குறித்து கேட்டறிய சொன்னேன். மகனின் நிலைமை  அபாய நிலையில் இருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், நள்ளிரவில், அகிலேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என்று  துளசிராம் தெரிவித்தார். மேலும், கடந்த மார்ச் மாதத்தில் ஷர்மாவை கடைசியாகப் பார்த்தேன். குடும்பம் மதுராவில் உள்ள கோவிந்த் நகரில் வசித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

குர்கானில் வசிக்கும் ஷர்மாவின் தம்பி புவனேஷ், அவரது உடலை சேகரிக்க கோழிக்கோடு சென்றுள்ளார்.

29 வயதான மேகா, இன்னும் பதினைந்து நாட்களுக்குள் குழந்தையை ஈன்றெடுக்க உள்ளார். கோழிக்கோட்டில் உள்ள ஏர் இந்தியா குடியுரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில், பிரசவம் காரணமாக கடந்த ஜூன் மாதம் மேகா தனது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். ஆகஸ்ட் 21 முதல் 15 நாள் விடுப்பில் செல்ல  அகிலேஷ் சர்மா விண்ணப்பித்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

 

ஷர்மாவின் உறவினர் பசுதேவ், "விமான விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டாலும், சர்மாவின் மரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த இக்கட்டான சூழலில், அவரை நாங்கள் வேதனைப்படுத்த விரும்பவில்லை. ஐ.சி.யுவில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

விமானத்தை இயக்கம் விமானியாக வர வேண்டும்  (பைலட்)  என்பதை எப்போதும் நினைத்தார். அவர் புத்திசாலி மிகவும் திறமையானவர். நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணிக்கு உந்துதல் கொடுத்தேன், ஆனால் அவர் விமானத்தில் பறக்க விரும்பினார்" என்று துளசிராம் தெரிவித்தார். அவர் 2017-ல் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி அமர்த்தப்பட்டர். எங்களது கிராமத்தில் விமானியாக ஆன முதல் நபர் சர்மா தான்  என்று அவரின்  உறவினர் லீலதர் தெரிவித்தார்.

சர்மா இறந்தாலும், விமான விபத்தில் ​​பலர் காப்பாற்றப்பட்டனர் என்பதில் இருந்து துளசிராம் ஆறுதல் பெறுகிறார்.

இருப்பினும், பைலட் ஆக விரும்பும் லோகேசை (சர்மாவின் தம்பி) தனது மூத்த சகோதரரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற அனுமதிப்பாரா என்பது அவருக்குத் தெரியவில்லை. "நாங்கள் பயப்படுகிறோம் ... என்னால் இன்னொரு மகனை இழக்க முடியாது" என்று துளசிராம் தெரிவித்தார்.

" 59 வயதான  தீபக் வசந்த் சாத்தே "36 ஆண்டுகள் விமானத்தை இயக்கி வந்த அனுபவம் வாய்ந்த விமானி " என்று அவரின் உறவினர் நீரஜ் சாத்தே ஒரு பேஸ்புக் பதிவில் எழுதினார். இந்திய விமானப் படையில் 21 ஆண்டுகள் பணி செய்த பிறகு, 2005 இல் ஏர் இந்தியா நிறுவனத்தில் சேர்ந்தார் என்றும் நீரஜ் பதிவிட்டார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஃப் விங் கமாண்டர் கமல் டீப், "சாத்தே இந்திய விமானப் படையின் சோதனை அதிகாரியாகவும் பணியாற்றினார் என்பது அவர் எவ்வளவு திறமையானவர் என்பதைக் காட்டுகிறது. "உயர்மட்ட விமானிகள் மட்டுமே அந்த தரத்திற்கு வருகிறார்கள்." என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil t.me/ietamil

 

Kerala Flight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment