உயிரியல் பூங்காவில் விடப்பட்ட கிருஷ்ணா யானை மாரடைப்பால் மரணம்!

அக்டோபர் 29ம் தேதி இந்த யானை 5 மக்களை கொன்றது குறிப்பிடத்தக்கது.

Krishna elephant dies of cardiac arrest in Assam
Krishna elephant dies of cardiac arrest in Assam

 Abhishek Saha

Krishna elephant dies of cardiac arrest in Assam : கோல்பாரா மாவட்டத்தில் அக்டோபர் 29ம் தேதி கிருஷ்ணா என்ற யானை 5 நபர்களை கொன்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை பிடித்து ஓராங் தேசிய பூங்காவிற்கு அனுப்பினர் வனத்துறையினர். ஆனால் நேற்று காலை அந்த யானை பூங்காவில் உயிரிழந்துவிட்டதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கௌஹாத்தியில் இருக்கும் வெட்னரி சயின்ஸ் கல்லூரியின் கதிரியக்கவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.கே. சர்மா “யானை மாரடைப்பால் மரணமடைந்துவிட்டது என்று கூறியுள்ளார். யானையை பிடிக்க எடுத்த முயற்சிகள் மற்றும் அதனை வேறிடத்துக்கு மாற்றி அனுப்பியது போன்ற காரணங்களால் இந்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்று அறிவித்துள்ளார்.

ரத்தம் மற்றும் இதர மாதிரிகளை மேற்படி ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக அறிவித்த மருத்துவர், வேறெந்த காரணங்களால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை ஆய்வு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். நேற்று காலை 05:45 மணி அளவில் இந்த யானை உயிரிழந்ததாக பி.வி.சந்தீப் (பிராந்திய ஃபாரஸ்ட் ஆஃபிசர்) அறிவித்தார். கண்காணிப்பு மையத்தில் யானைக்கு சிறப்பான கவனிப்பு அளிக்கப்பட்டதாகவும், பாகன்களின் உத்தரவுக்கு சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

30 வயது மதிப்பு மிக்க இந்த யானை முதலில் ஹோஜாய் மாவட்டத்தில் இருக்கும் லும்டிங் காட்டுப்பகுதியில் விடப்பட்டது. அங்கு இருக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் யானை ஓராங் உயிரியல் பூங்காவில் விடப்பட்டது. ஆனால் அங்கு இருக்கும் வனத்துறையினர் இந்த யானையை கும்கியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த யானை தன்னுடைய கூட்டத்தில் இருந்து விலகி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு யானை பின்தொடர்வது, பிடிப்பது, மற்றொரு இடத்தில் அதனை விடுவது போன்ற செயல்பாடுகள் அசாமில் இது தான் முதல் முறை. இந்த செயல்பாட்டில் பாஜக எம்.எல்.ஏ பத்மா ஹஜாரிக்கா தன்னுடைய முழு குடும்பத்துடன் ஈடுபட்டார். யானையின் மரணம் குறித்து குறிப்பிடுகையில் “இது மிகவும் துரதிர்ஷ்டமானது. மேலும் யானைகளை வேறொரு இடத்திற்கு மாற்றுவது என அனைத்தும் சரியாக தான் இருந்தது என்றும் அவர் அறிவித்தார். யானை பிடிபடும் போது அதன் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தகவல்கள் அளித்தனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Krishna elephant dies of cardiac arrest in assam

Next Story
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார் என மோடி அறிவிப்புparliament, farooq abdullah detention, kashmir, Parliament winter session, citizenship bill, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பிரதமர் மோடி, ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ், ayodhya act parliament, all party meeting, amit shah, lok sabha, rajya sabha, Tamil indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com