Asad Rehman
கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக இந்து மனுதாரர்களால் கூறப்படும் ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Krishna Janmabhoomi land dispute case: Allahabad HC allows survey of Mathura’s Shahi Idgah Mosque
மசூதியின் வீடியோ ஆய்வு (இது வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் அனுமதித்த ஆய்வின் அடிப்படையில் இருக்கும்) மற்றும் வளாகத்தில் வழிபாடு நடத்துவதற்கான உரிமை கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுதாரர்களில் ஒருவரான ரஞ்சனா அக்னிஹோத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு கமிஷன் மூலம் ஆய்வு செய்ய அனுமதித்துள்ளது. ஆர்டர் நகல் பதிவேற்றம் செய்யப்பட்டதும் கூடுதல் விவரங்கள் வெளியாகும்.” என்று கூறினார்.
மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி, பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், கிருஷ்ணர் பிறந்த இடம் என்று நம்பப்படும் கிருஷ்ணா ஜென்மஸ்தலத்தை ஒட்டி ஒரு கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது.
வெவ்வேறு மனுதாரர்களால் மதுராவில் உள்ள நீதிமன்றங்களில் குறைந்தது ஒரு டஜன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கத்ரா கேசவ் தேவ் கோயிலுடன் பகிர்ந்து கொள்ளும் 13.77 ஏக்கர் வளாகத்தில் இருந்து மசூதியை அகற்றுவதற்கான கோரிக்கை அனைத்து மனுக்களிலும் உள்ள பொதுவான அம்சமாகும்.
வியாழக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ”அட்வகேட் கமிஷனரை நியமிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அட்வகேட் கமிஷனராக யார் இருப்பார்கள், அதற்கான வழிமுறைகள் என்ன, அது மூன்று பேர் கொண்ட குழுவாக இருக்குமா? இந்த விஷயங்கள் அனைத்தும் டிசம்பர் 18 அன்று முடிவு செய்யப்படும்,” என்று கூறினார்.
“ஷாஹி இத்கா மசூதியில் நிறைய அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளன, மேலும் உண்மையான நிலையை அறிய, உண்மையான வழக்கறிஞர் கமிஷனர் தேவை என்று நாங்கள் கோரினோம். எங்களின் விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்துள்ளது” என்று விஷ்ணு சங்கர் ஜெயின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“