Advertisment

கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா தொடர்பான 15 வழக்குகளை ஒருங்கிணைத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

வியாழன் அன்று உயர் நீதிமன்ற நீதிபதி மயங்க் குமார் ஜெயின், "நீதியின் நலனுக்காக" வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றார்.

author-image
WebDesk
New Update
Krishna Janmabhoomi

Krishna Janmabhoomi Shahi Idgah mosque case

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா மஸ்ஜித் தகராறு தொடர்பான வழக்குகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை ஒருங்கிணைத்தது.

Advertisment

டிசம்பர் அன்று ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு கமிஷனை நியமிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் அனுமதித்தது.

அதற்கு முன்மே இல்ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தனக்கு மாற்றிக் கொண்டது.

வியாழன் அன்று உயர்நீதிமன்ற நீதிபதி மயங்க் குமார் ஜெயின் "நீதியின் நலனுக்காக" வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றார்.

கத்ரா கேசவ் தேவ் கோவிலுடன் பகிர்ந்து கொள்ளும் 13.37 ஏக்கர் வளாகத்தில் இருந்து மசூதியை அகற்ற வேண்டும் என்பதே இந்த அனைத்து மனுக்களிலும் உள்ள பொதுவான கோரிக்கை.

இந்த வழக்குகள் ஒரே மாதிரியானவை. இந்த வழக்குகளின் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் மற்றும் பொதுவான சான்றுகளின் அடிப்படையில் வழக்குகள் ஒரே நேரத்தில் முடிவு செய்யப்படலாம். நீதிமன்றத்தின் நேரத்தை மிச்சப்படுத்தவும் தரப்பினருக்கு ஏற்படும் செலவுகளை மிச்சப்படுத்தவும், முரண்பட்ட தீர்ப்புகளைத் தவிர்க்கவும் நீதியின் நலன் கருதி வழக்குகளை ஒருங்கிணைப்பது நல்லதுஎன்று நீதிமன்றம் கூறியது.

இந்து வாதிகள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உயர் நீதிமன்றத்தில்அசல் வழக்கு செப்டம்பர் அன்று மதுரா சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) முன் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்கட்ராவின் ஏக்கர் கேசவ் தேவ் மற்றும் சர்ச்சைக்குரிய கட்டமைப்பை அகற்றுவது தொடர்பாக இதேபோன்ற வேறு சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, என்றார்.

சன்னி வக்பு வாரியம், இத்கா மசூதிக் குழு மற்றும் பிற பிரதிவாதிகள் இதேபோன்ற மற்றும் அதே கேள்வியை உள்ளடக்கிய முன்பு சமர்ப்பித்த வழக்குகள் ஒருங்கிணைக்கப்படலாம், என்பதை என்று உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது.

வழக்குரைஞர் ஜெயின் தனது சமர்ப்பிப்பில் கடந்த டிசம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி சர்ச்சைக்குரிய சொத்தை ஆய்வு செய்வதற்காக மூன்று வழக்கறிஞர்களின் குழுவின் அமைப்பு மற்றும் முறைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, என்றும் கூறினார்.

டிசம்பர் 14 ஆம் தேதி உத்தரவின்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படலாம். மேலும் வாதிகள் சார்பாக சில வழக்கறிஞர்களும் ஆணையத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படலாம், என்றும் அவர் கூறினார்.

உ.பி.சன்னி மத்திய வக்பு வாரியத்தின் வழக்கறிஞராக உள்ள வழக்கறிஞர் புனித் குமார் குப்தா அவரது தந்தை இறந்து விட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை எனக்கூறி மனு தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை ஜனவரி 17ம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

Read in English: Allahabad High Court clubs 15 suits linked to Krishna Janmabhoomi, Shahi Idgah

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment