நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல் கர்நாடகாவில் மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஊடகங்களில் குமாரசாமி குறித்த செய்திகள் வெளிவந்த போது, அவரின் கடந்த கால வாழ்க்கை குறித்த சர்ச்சையும் வெளிவர தொடங்கின. குறிப்பாக குமாரசாமி மகள் வயது நடிகையை மணந்துக் கொண்டு ரகசிய வாழ்க்கை நடத்தியது, அவர்களுக்கு 8 வயதில் மகள் இருப்பது என ஏகப்பட்ட சர்ச்சைகள் குறித்த புகைப்படங்களும் வெளிவர தொடங்கியது.
கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை குட்டி ராதிகா. தமிழில் இயற்கை படத்தில் நடித்திருந்தார். குமாரசாமிக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி 2 மகள்கள் இருந்த நிலையில், தனது 57 ஆவது வயதில் ராதிகாவை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார். அப்போது ராதிகாவுக்கு 26 வயது.
கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் குமாரசாமியின் பெயருக்கு பெருமளவில் கலங்கம் ஏற்பட்டது. அதன் பின்பு சில வருடங்கள் கழித்து நடிகை ராதிகா குமாரசாமி உடனாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். குமாரசாமியை தான் திருமணம் செய்துக் கொண்டதாகவும், ஷிமிகா என்ற பெண் குழந்தையும் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
அதன் பின்பு, இந்த சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்த பரபரப்புக்கள் ஊடகங்களில் வெளியான போது மக்கல் பலரும் கூகுளில் குமாரசாமியின் மனைவி யார் என்பதை தெரிந்துக் கொள்ள கூகுளில் அதிகளவில் தேடியுள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் குமாரசாமியின் மனைவி ராதிகா இடம் பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.