scorecardresearch

மனைவியின் தலையை வெட்டி காவல் நிலையம் கொண்டு வந்த கணவர்.. பதறிப்போன காவலர்கள்!

சதீஸை அங்கிருந்த காவலர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.

மனைவியின் தலையை வெட்டி காவல் நிலையம் கொண்டு வந்த கணவர்.. பதறிப்போன காவலர்கள்!

கர்நாடக மாநிலத்தில் மனைவி மீது சந்தேகத்தில்,  அவரின் தலையை வெட்டி 20 கிமீ தூரம்  பயணம் செய்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்மங்களூரு அருகே உள்ள சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ். இவரின் மனைவி ரூபா. இவர்களுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், ரூபாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில், கடந்த 9-ம் தேதியன்று பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய சதீஸ். அப்போது, ரூபாவுடன் அந்த தொழிலாளியை சேர்த்துப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், இருவரையும் அடித்து, கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது, அருகில் கிடந்த வெட்டுக்கத்தியை எடுத்து இருவர் மீதும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயங்களுடன் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். ஆனால், மிகுந்த கோபத்தில் இருந்த சதீஸ் ரூபாவின் தலையைத் துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர், ஒரு பையில் ரூபாவின் தலையை எடுத்துக்கொண்ட சதீஸ், போலீஸில் சரணடைய 20 கிலோ மீட்டர் பைக்கில் பயணித்துள்ளார். காவல் நிலையத்துக்குச் சென்ற அவரை போலீஸார் கைது செய்தனர். மனைவியின் தலையுடன் போலீஸில் சரணடைய வந்த சதீஸை அங்கிருந்த காவலர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ktaka man beheads wife head in a bag

Best of Express