கூடங்குளம் அணு மின்நிலையம் போல் இஸ்ரோவிலும் தகவல் திருட்டு! திடுக்கிடும் உண்மைகள்!

தென்கொரிய ராணுவத்தின் நெட்வொர்க்கை ஹேக் செய்யப்பட்ட அதே வைரஸ்கள் கூடங்குளத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 Jay Mazoomdaar

Kudankulam Nuclear Power Project and ISRO cybersecurity hacked : கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்கள் மூலமாக திருட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த செய்தியின் தாக்கம் அடங்கும் முன்னரே, இஸ்ரோவின் தகவல்களும் ஹேக்கர்கள் மூலமாக திருடும் முயற்சிகள் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

To read this article in English

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட மல்வேர் டி-டிராக் என்று கண்டறியப்பட்டு, அதனை தடுக்கும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 3ம் தேதி கூடங்குளத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. செப்டம்பர் 4ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ம் தேதி கூடங்குளம் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்கள் virustotal.com என்ற இணையத்தில் வெளியாக மல்வேர் அட்டாக் குறித்து சமூக வலைதளங்களின் பேசும்பொருளானது.

அக்டோபர் 29ம் தேதி அணு மின் நிலையம் எந்தவிதமான தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை என்று கூடங்குளம் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் இந்திய அணுசக்திக் கழகம் ”நிர்வாக தேவைக்காக இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் வழியாக ஹேக்கிங் நடைபெற்றது. உடனே அந்த பிரச்சனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்று அறிவித்தது., மேலும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தது. விசாரணையின் முடிவில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் எந்த விதமான தாக்குதலும் நடைபெறவில்லை என்று கண்டறியப்பட்டது. இஸ்ரோ தரப்பில் இது குறித்து எந்தவிதமான தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரோவுக்கு கேள்விகள் கேட்டு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு இன்னும் பதில் வந்து சேரவில்லை. அதே போன்று கால்கள் மற்றும் மெசேஜ்களுக்கும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க வெறும் 100 மணி நேரம் மட்டுமே மிஞ்சியிருந்த போது மல்வேர் தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வெளியானதாகவும் அதற்கேற்ற வகையில் உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ரியாக்டர்களை இயக்கும் முக்கிய நெட்வோர்க்குகள் மற்றும் இதர இயக்கங்களை மேற்பார்வையிடும் ஆன்லைன் நெட்வொர்க்குகள் என இரண்டு நெட்வொர்க்குகள் கூடங்குளத்தில் இயங்கி வருகிறது. இதில் இணையத்துடன் இணைக்கப்பட்ட நெட்வொர்க் மூலமாகவே இந்த தாக்க்குதல் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் “இந்தியாவில் இருக்கும் வங்கிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மையமாகக் கொண்டு டி-ட்ராக் மல்வேர் பரப்பப்பட்டுள்ளது” என ரஷ்யாவை மையமாக கொண்டு செயல்படும் கேஸ்பெர்ஸ்கை நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு தென்கொரிய ராணுவத்தின் இண்டெர்நெல் நெர்வொர்க்கினை ஹேக் செய்ய பயன்படுத்தப்பட்ட அதே வகை வைரஸ்கள் தான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சியோல் நகரை மையமாக கொண்டு செயல்படும் IssueMakersLab அறிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close