Advertisment

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்தித்த தாயார் மற்றும் மனைவி!

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ்வை, அவரது தாயாரும் மனைவியும் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்தித்த தாயார் மற்றும் மனைவி!

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை, அவரது தாயாரும் மனைவியும் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

Advertisment

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

இதையடுத்து, குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.

ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது.

இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வருவதால் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த மே மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக எடுத்த தொடர் முயற்சிக்கு பாகிஸ்தான் அரசு இறுதியாக ஒப்புதல் அளித்தது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. அவர்கள் இருவரும் பாகிஸ்தான் வருவதற்கு கடந்த 20-ந்தேதி விசா வழங்கப்பட்டது.

இதையடுத்து, "குல்பூஷனின் மனைவி அவரை சந்திக்க இருப்பது, சிறையில் வாடும் குல்பூஷனுக்கு நிச்சயம் மனோரீதியாக வலிமை தரும். அவரை இந்தியா கொண்டுவருவதற்கு மீதமுள்ள சில நடைமுறை சிக்கல்கள் விரைவில் களையப்படும்" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இருக்கும் சிறைச்சாலையில் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி ஆகியோர் குல்பூஷன் ஜாதவை இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இவர்கள் இருவரும் இன்று இஸ்லாமாபாத் நகருக்கு வந்தனர். சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜாதவ் முன்கூட்டியே வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின், சுமார் அரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த சந்திப்பிற்கு பின் பேசிய குல்பூஷன் ஜாதவ், "எனது தாயையும், மனைவியையும் சந்திக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் வேண்டுகோள் வைத்தேன். அதை ஏற்றுக் கொண்டு இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த பாகிஸ்தான் அரசுக்கு என் நன்றிகள்" என்று கூறினார்.

Kulbushan Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment