மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த சமூக ஆர்வலருமான குல்தீப் நய்யார் இன்று காலமானார். அவருடைய உடலுக்கு இன்று மதியம் 1 மணி அளவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லியில் வசித்து வந்த அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் ஆசிரியராக பணியாற்றிய குல்தீப் நய்யார் ஊடக சுதந்திரத்திற்காக அதிகம் போராடியவர். 2015ம் ஆண்டு, இவர் ஆற்றிய சிறப்புப் பணிகளுக்காக ஊடகவியல் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழினை நிறுவிய ராம்நாத் கோயென்காவுடன் பகிர்ந்து கொண்டார் குல்தீப்.
குல்தீப் நய்யார் புத்தகங்கள்
பியாண்ட் தி லைன்ஸ் (Beyond the Lines), இந்தியா ஆஃப்டர் நேரு (India after Nehru), எமெர்ஜென்சி ரீடோல்ட் (Emergency Retold) போன்று 15 நூல்களை எழுதி உள்ளார் குல்திப். 90களில் இங்கிலாந்திற்கான இந்தியாவின் ஹை கமிசனில் வேலை பார்த்து வந்தார். 1997ல் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு தேர்வு தேர்வு செய்யப்பட்டார்.
1923ம் ஆண்டு பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பிறந்தார் குல்தீப். சட்டம் படித்து முடித்த பின்பு, ஊடகவியல் துறையில் மேற்படிப்பு பயின்றார். பின்பு அஞ்சம் என்ற உருது பத்திரிக்கையில் பணியாற்றினார். டெல்லியில் இருக்கும் பல்வேறு ஊடக நிறுவனங்களில் தலைமைப் பதவி வகித்தவர்.
இந்திரா காந்தி ஆட்சியில் பிரகடனப்படுத்தப்பட்ட எமெர்ஜென்சியை எதிர்த்த பல்வேறு ஊடகவியலாளர்களில் குல்தீப் மிகவும் முக்கியமானவர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குல்தீப் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு சூழல்நிலை தொடர்பாக அவ்வபோது தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார் குல்தீப். அவருடைய மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குல்தீப் நாயரின் மனைவி பாரதி நய்யார் அவர்களுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
Kuldip Nayar was an intellectual giant of our times. Frank and fearless in his views, his work spanned across many decades. His strong stand against the Emergency, public service and commitment to a better India will always be remembered. Saddened by his demise. My condolences.
— Narendra Modi (@narendramodi) 23 August 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.