Kumaraswamy meets Amit Shah as JDS joins NDA: முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.
அக்கட்சியின் முன்னாள் முதல் அமைச்சரும், கட்சியின் தலைவருமான குமாரசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனது ஆதரவை வழங்கினார்.
இந்தச் சந்திப்பின்போது பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தனர்.
இது குறித்து ஜெ.பி நட்டா ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், ஜேடி(எஸ்) தலைவருமான எச்டி குமாரசாமி, எங்கள் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடி(எஸ்) அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 4 தொகுதிகளை ஜேடி(எஸ்) கட்சியுடன் பகிர்ந்து கொள்ள பாஜக தேசியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக பாஜக முன்னாள் முதல்வரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பிஎஸ் எடியூரப்பா இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Kumaraswamy meets Amit Shah as JD(S) joins NDA ahead of 2024 polls
மேலும் இந்தக் கூட்டணி தொடர்பாக டெல்லியிலும் பிஎஸ் எடியூரப்பா பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, JD (S) மேலிட தலைவர் தேவகவுடா, மாநிலத்தில் உள்ள பிராந்திய கட்சியை "காப்பாற்ற" பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முடிவு "அத்தியாவசியம்" என்று கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் கூறினார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்ததில் இருந்து ஜேடி (எஸ்), பாஜக தலைமையிலான ஜேடிஎஸ் கூட்டணிக்கு வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“