மோடி அளித்த ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி

பிரதமர் நரேந்திர மோடியின் ஃபிட்னஸ் சேலஞ்ச் சவாலை தொடர்ந்து, அவருக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அவரின் உடற்பயிற்சி குறித்த வீடியோ ஒன்றை இன்று காலை வெளியிட்டார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு மோடி இந்த வீடியோவை இன்று வெளியிட்டார்.

யோகா மற்றும் நடைப்பயிற்சியை தினமும் மேற்கொண்டு வரும் மோடி இந்த வீடியோவில் அதன் செய்முறையை பதிவு செய்துள்ளார். தினமும் உடற்பயிற்சி எடுப்பதனால் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீடியோ வெளியீட்டை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன் வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மணிகர் பத்ராவிற்கும் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்கும்படி சவால் விடுத்தார்.

இந்தச் சவாலை தொடர்ந்து, மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார். இந்தப் பதிலில், “என்னை சேலஞ்சில் தேர்ந்தெடுத்ததற்கும் எனது உடல்நலம் மீது அக்கரைக் கொண்டதற்கும் நன்றி. உடற்பயிற்சி அனைவருக்கும் முக்கியமான ஒன்று. யோகா மற்றும் டிரெட்மில் பயிர்சியையும் நான் தினமும் செய்து வருகிறேன். ஆனாலும் எனது உடல் நலத்தை விட இந்த நாட்டின் ஆரோக்கியத்திலேயே முதல் அக்கரைக் காட்ட விரும்புகிறேன். அதற்கு தங்களின் உதவியும் தேவை.” என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு குமாரசாமி அளித்துள்ள பதிலுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு அளித்து விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

×Close
×Close