scorecardresearch

கணவர் முதல்வர், மனைவி எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபையில் அரங்கேறிய சுவாரசியம்!

மதுகிரி எம்எல்ஏவாக அனிதா இருந்துள்ளார். ஆனால் அப்போது குமாரசாமி முதல்வராக இல்லை.

குமாரசாமி மனைவி அனிதா
குமாரசாமி மனைவி அனிதா

கர்நாடகாவில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் குமாரசாமி மனைவி அனிதா அமோகமாக வெற்றிப்பெற்றுள்ளதையடுத்து பலரும் இத்கைக் குறித்து பேசி வருகின்றனர்.

குமாரசாமி மனைவி அனிதா:

கர்நாடகாவின் 3 நாடளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று (6.11.18) வெளியாகின. இதில் ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் கர்நாடகா முதலமைச்சர் குமராசாமியின் மனைவி அனிதா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், அனிதா குமாரசாமி, பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட 1,09,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோகமாக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் குமாரசாமி இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் ராம்நகர் தொகுதியில் ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இங்கு அவரது மனைவி அனிதாவை களம் கண்டு வெற்றி பெற்றார். அனிதா வெற்றி பெற்றுள்ளதால் கணவர் முதலமைச்சராகவும், மனைவி உறுப்பினராகவும் சட்டமன்றம் செல்ல இருக்கின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நடந்திராத நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

குமாரசாமியும், அனிதாவும் இணைந்து எம்எல்ஏக்களாக இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ராமநகரா எம்எல்ஏவாக குமாரசாமி இருந்தபோது மதுகிரி எம்எல்ஏவாக அனிதா இருந்துள்ளார். ஆனால் அப்போது குமாரசாமி முதல்வராக இல்லை.

அனிதா மற்றும் குமராசாமியின் இந்த வெற்றியை மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kumaraswamy wife anitha script history by entering karnataka assembly