Kunal Kamra heckles Arnab Goswami on board IndiGo : இண்டிகோ விமானத்தில் பறப்பதற்கு பிரபல நகைச்சுவை பேச்சாளருக்கு தடை. குணால் கம்ரா ஒரு நகைச்சுவை மேடை பேச்சாளர் (Stand-up Comedian). மும்பையில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானத்தில் அவர் பயணம் செய்துள்ளார். அவருடன் சக பயணியாக பயணம் மேற்கொண்டவர் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி. இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அர்னாப் கோஸ்வாமியை தரக்குறைவாக திட்டிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் குணால் கம்ரா. அந்த வீடியோவில் அவர் பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் எதற்கும் பதில் தராமல் அமைதியாகவே பயணித்து வந்தார் அர்னாப்.
I did this for my hero…
I did it for Rohit pic.twitter.com/aMSdiTanHo— Kunal Kamra (@kunalkamra88) January 28, 2020
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், கம்ராவின் இந்த நடத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளனர். இது குறித்து கம்ராவிடம் கேள்விகள் எழுப்பிய போது, நான் மிகவும் பணிவாகவே அர்னாபிடம் கேள்விகள் கேட்டேன். நான் ஊடகவியல் துறை பற்றி என்ன யோசிக்கின்றேன் என்பதை நான் அவரிடம் விளக்கினேன். ஆனால் சில நிமிடங்கள் விமான பணிப்பெண் என்னை என்னுடைய இருக்கைக்கு செல்லுமாறு கூறினார். நான் மறுப்பு ஏதுமின்றி என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன். நான் அந்த விமானத்தில் பயணித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டேன். விமானிகளிடமும் மன்னிப்பு கேட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ ட்விட்டரில் வைரல் ஆகிய துவங்கிய நிலையில் இண்டிகோ நிறுவனம் குணால் கம்ராவிற்கு 6 மாதங்களுக்கு தங்களின் விமான சேவையில் பறக்க தடை விதித்து அறிவித்தது. மேலும் எங்களுடைய பயணிகள் அனைவரும் மற்ற பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்ளும் படி அறிவுறுத்துகின்றோம் என்றும் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தது.
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குணால் கம்ராவுக்கு எதிராக மற்ற விமான போக்குவரத்து நிறுவனங்களும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பறக்கும் விமானத்தில் இது போன்ற நிகழ்வு எப்போதும் ஏற்றுக் கொள்ள இயலாது. இது மற்ற சக பயணிகளின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்குகிறது என்றும் ட்வீட் செய்திருந்தார்.
Offensive behaviour designed to provoke & create disturbance inside an aircraft is absolutely unacceptable & endangers safety of air travellers.
We are left with no option but to advise other airlines to impose similar restrictions on the person concerned. https://t.co/UHKKZfdTVS
— Hardeep Singh Puri (@HardeepSPuri) January 28, 2020
இண்டிகோ விமானத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் 6 மாதங்கள் வரை குணால் கம்ரா ஏர் இந்திய விமானங்களில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது. 2017ம் ஆண்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விமானத்தில் பறக்கும் போது பயணிகளால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நோ-ஃப்ளை லிஸ்டினை உருவாக்கியது.
இதன்படி விமான பயணத்தின் போது மோசமாக நடந்து கொண்ட பயணிகள் குறித்து பைலட் முறையாக புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை விசாரிக்க இண்டெர்நெல் கமிட்டி அமைக்கப்படும். 30 நாட்களில் இந்த கமிட்டி விசாரணை செய்து, மோசமாக நடந்து கொண்ட எவ்வளவு நாள் தடை விதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். தரக்குறைவான பேச்சுக்கு 3 மாதங்கள் வரை தடையும், தாக்குதல் போன்ற சண்டைகளில் ஈடுபட்டால் 6 மாதங்கள் வரை தடையும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரையும் தடை விதிக்கப்படும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Kunal kamra heckles arnab goswami on board indigo