Shaju Philip
முன்னாள் மாநிலங்களவை துணை தலைவர் பி.ஜே. குரியன், காங்கிரஸ் கட்சி வலுவடைய வேண்டிய நேரம் இது என்று ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார். வலுவான தலைமை அமைய வேண்டும் என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்களில் பி.ஜே. குரியனும் ஒருவர்.
ராகுல் அல்லது பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக வர வேண்டும். அவர்கள் அந்த பதவிக்கு வர விரும்பவில்லை என்றால், கட்சி அந்த பதவிக்கு தகுந்த ஆளை தேர்வு செய்ய வேண்டும். அவர் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்கலாம் அல்லது தேர்வு செய்யப்படும் நபராகவும் இருக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேட்டி அளித்துள்ளார். கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு கட்சி வலுப்படத்தப்பட வேண்டும் என்றும் கட்சியை விட்டு விலகியே இருக்கும் தலைவர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க :Congress Meeting Today Live : ராஜினாமா முடிவில் சோனியா
கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுப்பட்டதே தவிர அதில் வேறேதும் உள் நோக்கம் இல்லை. கட்சிக்குள் தற்போது நிலவும் நிலையற்ற தன்மை கட்சிக்கு நல்லது அல்ல. ராகுல் காந்தி தயாராக இருக்கும் பட்சத்தில் அவர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும். கட்சியை இயக்க வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், “உள்கட்ட ஜனநாயகத்துடனும், பன்முகத்தன்மையை வரவேற்கும் விதத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ். ஏ.ஐ.சி.சியின் தலைமை மாற்றம் போன்ற ஒரு விஷயத்தில் தலைவர்கள் எடுக்கும் வெளிப்படையான நிலைப்பாடு உள் ஜனநாயகத்திற்கு எதிரானது. காங்கிரஸ் இவ்வாறு செயல்படுவது கிடையாது” என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil