KV Thomas link to Latin Catholics, Pinarayi govt’s man in Delhi Tamil News - கேரள அரசு பிரதிநிதியாக டெல்லியில் கே.வி தாமஸ்: கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை உறவுக்கு முயற்சி | Indian Express Tamil

கேரள அரசு பிரதிநிதியாக டெல்லியில் கே.வி தாமஸ்: கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை உறவுக்கு முயற்சி

பினராயி விஜயன் தலைமையிலான அரசு, டெல்லியில் தாமஸின் நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் கட்சிகள் முழுவதும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்திக்கொள்ள நம்புகிறது.

KV Thomas link to Latin Catholics, Pinarayi govt’s man in Delhi Tamil News
Thomas is the senior most Latin Catholic politician from kerala (file)

KV Thomas Tamil News: கடந்த 10 ஏப்ரல் 2022 அன்று, கண்ணூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23வது கட்சி காங்கிரஸில் கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் கலந்து கொண்டார். இதற்காக அவர் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து மே 2022ல், கொச்சியில் இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்திலேயே, அவர் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ், கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசாங்கத்தால் மீள்வாழ்வளிக்கப்பட்டுள்ளார். அது அவரை பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் இணைப்பாளராகப் பயன்படுத்தவும், விழிஞ்சம் துறைமுகம் தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவர்களுடனான உறவுகள் சேதமடைந்தையடுத்து, அவர்களுடன் பாலமாக செயல்படவும் பார்க்கிறது.

தாமஸ் மாநிலத்தில் இருந்து மூத்த கத்தோலிக்க கிறிஸ்தவ அரசியல்வாதி ஆவார். மேலும், அவர் அமைச்சரவை அந்தஸ்தைப் பெற இருக்கிறார். அதேநேரத்தில், அவர் டெல்லியில் கேரள அரசின் சிறப்பு பிரதிநிதியாகவும் செயல்படுவார். ஆனால் தாமஸுக்கு கேபினட் அந்தஸ்து மாநிலத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். இது ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் உள்ளது. முந்தைய எல்.டி.எஃப் அரசாங்கத்தின் போது, ​​அதே பதவிக்கு சி.பி.ஐ.(எம்) தலைவர் ஏ.சம்பத் நியமிக்கப்பட்டது அவரது 20 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு அரசின் கருவூலத்திற்கு ரூ.7.26 கோடி இழப்பு ஏற்பட்டது.

டெல்லியில் வெளிநாட்டு ஒத்துழைப்புக்காக, மாநில அரசு தற்போது முன்னாள் தூதரக அதிகாரி வேணு ராஜாமணியை தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் சிறப்புப் பணியில் உள்ள அதிகாரியாகக் கொண்டுள்ளது. மேலும், அதன் விஷயங்களைக் கவனிக்க டெல்லியில் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை ரெசிடென்ட் கமிஷனராக மாநிலம் வைத்துள்ளது.

நிர்வாக முன்னணியில், எல்.டி.எஃப், உள்நாட்டில் உள்ளவர்களின் கூற்றுப்படி, முன்னாள் மத்திய அமைச்சர் தாமஸ் மாநிலத்தின் கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மத்தியத்துடன் தொடர்புகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அரசு, டெல்லியில் தாமஸின் நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் கட்சிகள் முழுவதும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்திக்கொள்ள நம்புகிறது.

கேரளாவில், காங்கிரஸில் இருந்து வெளிநடப்பு செய்யும் ஒரு முக்கிய தலைவரை புறக்கணிக்க மாட்டோம் என்ற செய்தியை அரசு தெரிவிக்கிறது. அவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்துடன் அதன் இணைப்பாளராக இருப்பார். குறிப்பாக கொச்சியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அடுத்தடுத்த தேர்தல்களில் முன்னணியில் உள்ளது. கரையோர சமூகம் விழிஞ்சம் துறைமுகம் தொடர்பாக அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் நேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இந்த நியமனம் சாதகமான செய்தியை அனுப்பும் என்று எல்.டி.எஃப் நம்புகிறது. இடதுசாரி அரசாங்கம் சமூகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாக கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை கடந்த வாரம் குற்றம் சாட்டி இருந்தது.

கடந்த ஆண்டு திருக்காக்கரா இடைத்தேர்தலின் போது இடதுசாரி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போதிலும், எந்த விளைவையும் ஏற்படுத்தத் தவறியதால், கத்தோலிக்க கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரை தாமஸ் எவ்வளவு வெற்றிகரமானவர் என்பதை பார்க்க வேண்டும்.

2019 லோக்சபா தேர்தலில் அவருக்கு கட்சி போட்டியிட கொடுக்காததால் காங்கிரஸுடனான அவரது உறவு மோசமடைந்தது. தாமஸ் ஐந்து முறை லோக்சபா எம்.பி., மற்றும் இரண்டு முறை மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரலில், காங்கிரஸின் உத்தரவை மீறி, கண்ணூரில் சி.பி.ஐ.(எம்) தனது கட்சி மாநாட்டின் போது ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தாமஸ் கலந்து கொண்டார். இதனால், கட்சி கோபமடைந்தது, ஆனால் சி.பி.ஐ.(எம்) தாமஸை பாதுகாப்பதாக அறிவித்தது.

அடுத்த மாதம் எர்ணாகுளம் திருக்காக்கராவில் இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தேர்தல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிபிஐ(எம்) மாநாட்டில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் தாமஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பழம்பெரும் தலைவரான இவர், பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இத்தொகுதியில் காங்கிரஸ் வாக்கு வங்கியை சிதைப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்தது. ஆனால், காங்கிரஸ் இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தது, தொகுதியில் தாமஸின் செல்வாக்கின் வரம்புகளை விளக்குகிறது.

தாமஸ் நியமனம் குறித்து காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “தாமஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தரகர் ஆக்கப்பட்டுள்ளார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். தாமஸ் சங்பரிவார் தலைவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் அவர் பல சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு இடைத்தரகராக பணியாற்ற வேண்டும் என்று சிபிஐ(எம்) விரும்புகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kv thomas link to latin catholics pinarayi govts man in delhi tamil news