இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 19-வது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஏ.சி) தற்போதுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் புதிய முன்னோக்கி நகர்வு எதுவும் இல்லை, இருப்பினும் இரு தரப்பினரும் பிரச்சனைகளை விரைவாகத் தீர்க்க ஒப்புக்கொண்டனர்.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், எஞ்சியிருக்கும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன, அதே நேரத்தில் இராணுவ மற்றும் இராஜதந்திர சேனல்கள் மூலம் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகளின் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன.
இந்த இடைப்பட்ட காலத்தில், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
திங்களன்று, இரு தரப்பினரும் 19-வது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தையை இந்தியப் பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடத்தினர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி படி, கூட்டத்தில் நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் எல்லை நெறிமுறைகளை கடைபிடிப்பதை உறுதிசெய்வது மற்றும் மோதல்களைத் தவிர்க்க இரு தரப்பு ராணுவம் இடையே ரோந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவைகள் ஆலோசிக்கப்பட்டன.
“மேற்குப் பகுதியில் எல்.ஏல்.சி உடன் உடன் மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இரு தரப்பினரும் நேர்மறையான, ஆக்கபூர்வமான மற்றும் ஆழமான விவாதத்தை நடத்தினர். தலைமை வழங்கிய வழிகாட்டுதலின்படி, அவர்கள் திறந்த மற்றும் முன்னோக்கு பார்வையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக் போன்ற எஞ்சிய பிரச்சனைகள் , எல்.ஏ.சி.யில் உள்ள அனைத்து பழைய ரோந்துப் புள்ளிகளையும் அணுகுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. லடாக் பகுதியில் ராணுவம் ஒட்டுமொத்தமாகக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரசின் மற்றொரு அதிகாரி கூறுகையில், எல்.ஏ.சி.க்கு அருகாமையில் புதிய போஸ்ட்கள் எதுவும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வது குறித்து விவாதங்கள் நடந்ததாகக் கூறினார்.
பட்டாலியன் மட்டத்தில் வழக்கமான தொடர்பு மற்றும் இரு தரப்பிலும் ட்ரோன்கள் மூலம் அத்துமீறலைத் தவிர்ப்பது ஆகியவை விவாதிக்கப்பட்டன.
XIV கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கும் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்காக அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.