Advertisment

தொலைநோக்கு பார்வை இல்லாத இந்தியாவின் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை; விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள்

Lack of foresight caused Covid crisis’: India’s handling of pandemic dominates global headlines: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டைத் தாக்கியதிலிருந்தே, உலகெங்கிலும் உள்ள செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெறுவது முதல் சி.என்.என் போன்ற தொலைக்காட்சி சேனல்களில் விவாதங்களின் மைய பொருளாக நாட்டின் கொரோனா நிலைமை உள்ளது.

author-image
WebDesk
New Update
தொலைநோக்கு பார்வை இல்லாத இந்தியாவின் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை; விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள்

செவ்வாய்கிழமை அன்று இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆல் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிய நிலையில், நாட்டில் நிலவும் கோவிட் -19 நெருக்கடி, தொடர்ந்து உலக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டைத் தாக்கியதிலிருந்தே, உலகெங்கிலும் உள்ள செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெறுவது முதல் சி.என்.என் போன்ற தொலைக்காட்சி சேனல்களில் விவாதங்களின் மைய பொருளாக நாட்டின் கொரோனா நிலைமை உள்ளது.

தொற்று பாதிப்புகளின் அதிகரிப்பு, இந்தியாவின் பலவீனமான சுகாதார அமைப்பைத் தாக்கியுள்ளது மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதில் நிலவும் கடுமையான பற்றாக்குறை பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி இயக்கத்தையும் தாக்கியுள்ளது. நாட்டில் மருத்துவ வளங்களின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கோவிட் நோயாளிகள் மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்காக துடித்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தினசரி பாதிப்பில் 4 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்த ஒரே நாடு இந்தியா.

இந்தியா ஒரு நாளைக்கு 3.5 லட்சத்திற்கும் அதிகமான புதிய பாதிப்புகளையும் 3,000 இறப்புகளையும் பதிவு செய்யும் நேரத்தில், நாட்டின் நெருக்கடி குறித்து சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்:

‘இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி மோடியின் வலிமையை உலுக்கியுள்ளது’: நியூயார்க் டைம்ஸ்

மற்ற நாடுகளை விட  இந்தியா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் இந்த நிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் "அதீத நம்பிக்கையே" காரணம், என சுகாதார வல்லுநர்களும் ஆய்வாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். சுயாதீன சுகாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், மோடியின் அதீத நம்பிக்கையும் அவரது ஆதிக்கம் செலுத்தும் தலைமைத்துவ பாணியும் நாட்டின் கொரோனா நிலையில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. விமர்சகர்கள் கூறுகையில், இந்தியாவின் மதிப்பை பழைய நிலைக்கு மாற்றுவதற்காக, நீண்டகால அபாயங்கள் இருந்தபோதிலும் வணிகத்திற்காகத் தளர்வுகள் செய்வதில் அவரது நிர்வாகம் உறுதியாக இருந்தது, ”என்று ஒரு கட்டுரையில் கூறுகின்றனர்.

‘இந்தியா ஆக்ஸிஜனுக்காக போராடினாலும், அரசியல்வாதிகள் ஒரு பிரச்சினையும் இல்லை என மறுக்கிறார்கள்’: தி கார்டியன்

கார்டியன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துத் தொகுப்பில், அதன் எழுத்தாளர் கூறுகையில், நாடு தனது கோவிட் -19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை சேகரிக்கத் துடிக்கும் ஒரு காலத்தில், அவர்களில் பலர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்ட நிலையிலும், அரசியல் தலைவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என இந்த கருத்துக்களை புறக்கணித்ததோடு, அது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்துகின்றனர்.

"உத்தரபிரதேச முதல்வர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் புகார் செய்யும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியுள்ளார், ஏனெனில் அத்தகைய பற்றாக்குறை இல்லை என்று அவர் வலியுறுத்தி வருகிறார். ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்று புகார் கூறும் மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அவர் சமீபத்தில் மிரட்டியுள்ளார், ஏனெனில் அவர்கள் வதந்தி பரப்புகிறார்கள், பீதியை பரப்புகிறார்கள், என்று யோகி கூறுகிறார்,” என்று கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு நாட்டின் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டியுள்ள கட்டுரை, “பாரதீய ஜனதா கட்சியின் உத்தரகண்ட் முதலமைச்சர் (உத்தரபிரதேசத்தின் எல்லையில் உள்ள இமயமலை மாநிலம்) உலகின் மிகப்பெரிய நதி யாத்திரை கும்பமேளாவை இரண்டாவது அலைக்கு மத்தியில் நடத்த அனுமதித்தார். ஏனென்றால் ஜோதிடர்கள் விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஒரு வருடம் முன்னதாகவே நடக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவரது இந்த முடிவுக்கு பிரதமரின் ஆசீர்வாதமும் உண்டு.

இந்தியாவின் பேரழிவு தரும் கோவிட் -19 நெருக்கடியை பிரதமர் மோடி தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்’: சி.என்.என்

நாடு முழுவதும் கோவிட் பாதிப்புகள் அதிகரித்துள்ளதற்கு தேர்தல் பேரணிகளைக் காரணம் காட்டும், சி.என்.என் இன் ஒரு கட்டுரையில், “ஏப்ரல் 17 அன்று, ஒரு மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, முகக்கவசம் அணியாத பிரதமர் நரேந்திர மோடி, ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  'நான் ஒருபோதும் ஒரு பேரணியில் இவ்வளவு பெரிய கூட்டங்களைக் கண்டதில்லை என்று பெருமை பேசினார்: 'அவரது நாடு ஒரு மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருந்தது. அந்த நாளில், முழு தொற்றுநோய்களின் போதும் பல நாடுகள் கண்ட மொத்த பாதிப்புகள், இந்தியாவில் ஒரே நாளில் 2,61,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகின.

இந்தியாவின் இரண்டாவது அலைக்கான அந்த பொறுப்பு அரசாங்கத்திற்கே “முதன்மையானது” என்று கூறி, ஒரு சி.என்.என் நிபுணர் பேசினார், “மக்கள் பொறுப்பேற்றுள்ள தங்கள் அரசாங்கங்கள், உங்களை கவனித்துக்கொள்வோம் என்று அவர்களுக்கு உறுதியளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்… ஆனால் அரசாங்கம் கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை. என் வாழ்நாளில், இப்போது இந்தியா மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, நிச்சயமாக, எங்கே என் பிரதமர்? ”என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பணக்காரர்கள் எதுவும் செய்யாதபோது இந்தியாவில் என்ன நடக்கிறது’: அட்லாண்டிக்

ஒரு தலையங்கத்தில்,  தற்போதைய நெருக்கடியைத் தவிர்க்க முதல் மற்றும் இரண்டாவது அலைக்கு இடையில் கிடைத்த குறைவான நேரத்தில் நரேந்திர மோடி அரசு மிகக் குறைவாகவே செயல்பட்டது என்று வித்யா கிருஷ்ணன் கூறினார்.

"இந்தியாவில் முதலில் வைரஸ் தொற்று ஏற்பட்டபோது, பிரதமர் ஒரு மிருகத்தனமான பணிநிறுத்தத்தை விதித்தார்.  இது பெரும்பாலும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை காயப்படுத்தியது. நாட்டின் உயர்மட்ட விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசிக்காமல், நாட்டின் சுகாதார பாதுகாப்பு உள்கட்டமைப்பை கட்டியெழுப்ப நேரத்தை பயன்படுத்தாமல், மாறாக முந்தைய மாதங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்பை கணக்கில் கொண்டு, அவரது அரசாங்கம் வெற்றிகரமான ஒரு அனுமதியை வழங்கியது, அதாவது மகத்தான இந்து மத விழாக்கள் மற்றும் நெரிசலான விளையாட்டு போட்டிகளை முன்னோக்கி செல்ல அனுமதித்தது. மோடி ஆளும் இந்து-தேசியவாத கட்சி உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் டொனால்ட் டிரம்பையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு வெகுஜன தேர்தல் பேரணிகளையும் சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வுகளையும் நடத்தியுள்ளது ”என்று கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

‘மோடி அரசு தடுக்காவிட்டால் இன்னும் நிறைய இறுதி சடங்குகள் எரியும்’: பைனான்சியல் டைம்ஸ், இங்கிலாந்து

"இந்தியாவின் இரண்டாவது அலையின் சோகம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், இந்த நெருக்கடியில் மோடி தனது பங்கிற்கு பொறுப்புக் கூறாவிட்டால், "அவரது நாடு முழுவதும் இன்னும் இறுதி சடங்குகள் எரியும்" என்று பைனான்சியல் டைம்ஸ் எச்சரிக்கிறது.

"மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதால் தெருக்களில் மக்கள் இறப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்தியா இன்று 16 மாதங்களுக்கு முன்பு வைரஸ் அடையாளம் காணப்பட்டபோது வரையப்பட்ட மோசமான சூழ்நிலைகளை ஒத்திருக்கிறது. மற்ற இடங்களில் உள்ள ஜனநாயகவாதிகளைப் போலவே, மோடியும் இன்றைய நிலைக்கு காரணமான தனது அரசாங்கத்தின் முந்தைய தவறுகளை இப்போது செய்ய தயங்குவார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவரது நாடு முழுவதும் அதிக இறுதி சடங்குகள் எரியும், ”என்று கட்டுரையில் உள்ளது.

‘நரேந்திர மோடியின் தொலைநோக்கு குறைபாடு நெருக்கடியை ஏற்படுத்தியது’: லு மொண்டே

பிரெஞ்சு செய்தித்தாள் லு மொன்டேயில் வெளியிடப்பட்ட ஒரு தலையங்கம், மோடியின் “தொலைநோக்கு, ஆணவம், மற்றும் வாய்வீச்சு குறைபாடு ஆகியவை இப்போது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சூழ்நிலையின் காரணங்களில் ஒன்றாகும்” என்று கூறுகிறது.

"பிரதம மந்திரி, 2020 ஆம் ஆண்டில் மிருகத்தனமான ஊரடங்கை விதித்து, மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கைவிட்டு, தனது நாட்டை முடக்கி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பின்னர், 2021 இன் தொடக்கத்தில் தனது நாட்டின் பாதுகாப்பை முழுவதுமாகக் குறைத்தார்,"

‘மோடி மட்டுமல்ல, கோவிட் -19 நெருக்கடிக்கு இந்தியாவின் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்’: டைம் இதழ்

டைம் இதழ், ஒரு கருத்தில், "அரசாங்கத்தின் வெற்றிகளை பெரிதாக" பேசும் இந்திய ஊடகங்களின், "பொறுப்பு இல்லாமையே" தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்று கூறியுள்ளது.

"பல இந்தி மற்றும் ஆங்கில மொழி செய்தி சேனல்களும், பிராந்திய செய்தி நிறுவனங்களும் அப்பட்டமாக மோடிக்கு ஆதரவானவை. அவர்கள் வழக்கமாக அரசாங்கத்தின் வெற்றிகளை பெரிதுபடுத்தியுள்ளனர், அல்லது அதன் தோல்விகளை மறைக்கின்றனர் அல்லது எதிர்க்கட்சிகள், தாராளவாதிகள், முஸ்லிம்கள், சமூக ஆர்வலர்கள், இடதுசாரிகள், எதிர்ப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற வகைப்படுத்தப்பட்ட தேசவிரோதிகள், போன்ற மோடியின் அதிருப்தியாளர்களை வெளிக்காட்டுகின்றன:”என்று கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், “மோடி தொற்றுநோயை ஆரம்பத்தில் கையாண்டது குறித்த எந்தவொரு பொது ஆய்விலும் இருந்து ஊடகங்கள் அவரைப் பாதுகாத்தன. அவர் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் தோன்றினார், அதில் அவர் சிறிதளவு வழிகளைக் கூறினார். ஆனாலும் நெருக்கடியைச் சமாளிக்க உறுதியான திட்டங்களை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, ஒலி மற்றும் ஒளியின் பண்டிகைகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார், மேலும் மருத்துவமனைகளில் மலர்களை பொழிவதற்கு ஆயுதப்படைகளுக்கு உத்தரவிட்டார் - இவை அனைத்தும் மோடியின் வலுவான தலைமைக்கு சான்றாக ஊக்கப்படுத்தப்பட்டன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Narendra Modi Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment