Shaju Philip
கேரள முதல்வர் பினராயி விஜயனின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், வெளிநாட்டுப் பயணம் குறித்த ‘முன்னேற்ற அறிக்கை’ வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூறியதை அடுத்து முதல்வரின் வெளிநாட்டு பயணம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பினராயி விஜயன் தற்போது நார்வே மற்றும் பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், பேரன் இஷான் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர, அவரது மூன்று அமைச்சரவை சகாக்கள் மற்றும் ஒரு உயர்மட்ட அதிகாரிகள் குழு உடன் சென்றுள்ளது.
இதையும் படியுங்கள்: கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிரான மனநிலை; எஸ்.சி/ எஸ்.டி இடஒதுக்கீட்டை கையில் எடுத்த பா.ஜ.க அரசு
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், ”முதலமைச்சரோ அல்லது அவரது அமைச்சரவை சகாக்களோ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அரசின் கருவூலத்தின் செலவில், இத்தகைய பயணங்களின் நோக்கம் குறித்து மக்களை நம்ப வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. முதல்வர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்றுள்ளார். இதுபோன்ற பயணங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், மாநில மக்கள் என்ன லாபம் அடைந்துள்ளனர் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் கேரள மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.,” என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு பதிலளித்த சி.பி.ஐ(எம்) மூத்த தலைவர் ஏ.கே பாலன், ”சுற்றுப்பயணத்தில் எந்த தவறும் இல்லை, காங்கிரஸ் ஆட்சியின் போது, அமைச்சர் ஒருவர் 26 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார், 12 முறை அவர் தனது மனைவியுடன் சென்றுள்ளார். அந்த அரசில் இருந்த மற்றொரு அமைச்சர் 16 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்,'' என்று கூறினார்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மற்றும் அவரது சகாக்கள் 85 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக சமீபத்தில் சட்டசபையில் அரசு தெரிவித்திருந்தது. இதில் விஜயன் மட்டும் 15 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, லண்டனில் நடந்த லோகா கேரளா சபா, வெளிநாட்டவர்களின் கூட்டத்தின் மண்டலக் கூட்டத்தில் பினராயி விஜயன் பேசினார். அதிகாரப்பூர்வ வெளியீட்டின் படி, முதல்வர் தலைமையிலான குழு நார்வேயில் உள்ள கேரள மக்களுடன் உரையாடியது, அவர்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதாக உறுதியளித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil