லக்கிம்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்பு
Lakhimpur Kheri violence: SC takes suo motu cognisance, CJI-led bench to hear matter on Oct 7: உத்திரபிரதேச வன்முறை தொடர்பான வழக்கை தானாக முன் வந்து எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம்; நாளை விசாரணை
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துக்கொண்டது. லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் எட்டு பேர் இறந்துள்ளனர். இதில் நான்கு பேர் மத்திய அமைச்சரும் மற்றும் பாஜக எம்.பியுமான அஜய் மிஸ்ராவின் மகனின் கார் மோதியதில் இறந்துள்ளனர்.
Advertisment
தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை அக்டோபர் 7 ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க லக்கிம்பூர் கேரிக்கு வந்த நாளில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக திங்கட்கிழமை, ஜந்தர் மந்தரில் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்த அனுமதி கோரிய விவசாய அமைப்பிடம், சட்டங்கள் நடைமுறையில் இல்லை மற்றும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் என்ன எதிர்ப்பு தெரிவிக்க விரும்பிகிறீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச், லக்கிம்பூர் கேரி போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, அதற்கு "யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்" என்று கூறியது.
அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் விவசாயிகள் மீது ஓடிய வாகனத்தை ஓட்டுவதாக பலர் கூறுகின்றனர். ஆனால் அமைச்சர், அவரது மகன் அந்த இடத்தில் இல்லை என்று மறுத்து வருகிறார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. தகவல் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில், காரில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட பிறகு டிரைவர் கொல்லப்பட்டார் என்பது தெரிகிறது. அது என் மகனாக இருந்தால், அவர் இறந்திருப்பார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஒரு கார் மக்கள் மீது ஓடிய இடத்திலிருந்து வெளியேறுவது சாத்தியமில்லை,”என்று அமைச்சர் கூறினார்.
அஜய் மிஸ்ரா இன்று நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கலந்து கொண்டார். அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் குறித்து சுமார் 40 நிமிடங்கள் விவாதித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து மிஸ்ரா தனது அலுவலகத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil