'இந்திராவுக்கு ஜனநாயகம் மீது மரியாதை இருந்தது; இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்கிறது': லாலு பிரசாத் பேட்டி

"தற்போதைய என்.டி.ஏ ஆட்சியை பொறுத்தவரை, இது ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல உணர்கிறேன். தற்போதைய அரசுக்கு ஜனநாயகம் மீது சிறிதும் மரியாதை இல்லை" என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.

"தற்போதைய என்.டி.ஏ ஆட்சியை பொறுத்தவரை, இது ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல உணர்கிறேன். தற்போதைய அரசுக்கு ஜனநாயகம் மீது சிறிதும் மரியாதை இல்லை" என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lalu interview

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனம் குறித்து பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜெயப்பிரகாஷ் நாராயண் (JP) இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான லாலு பிரசாத், அன்றைய அவசரநிலை காலகட்டத்திற்கும், இன்றைய ஆட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அவசரநிலையின் நினைவுகள்:

"ஜே.பி-யின் இயக்கத்தில், மாணவர் தலைவனாக மிக தீவிரமாக செயல்பட்டேன். அவசரநிலை அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே நான் கைது செய்யப்பட்டேன். சிறையில் நல்ல உணவு கேட்டு போராட்டம் நடத்தியது உட்பட, அநீதிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடியதால், மேலும் பல மாணவர் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று லாலு பிரசாத் தனது ஆரம்ப கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

 

Advertisment
Advertisements

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

 

"துன்ப காலங்களில் நகைச்சுவை ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியது. பிரபல வானொலி நாடகமான 'லோஹா சிங்'கின் வசனங்களை கூறி, சக கைதிகளை நான் மகிழ்விப்பேன் என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை அமைதிப்படுத்த முடியாது என்று லாலு பிரசாத் வலியுறுத்தினார். முன்னேற்றத்தின் பெயரால் நடந்த அட்டூழியங்களுக்கு வரலாறு சாட்சி என்று குறிப்பிட்ட அவர், "இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் கடுமையாக போராடிப் பெறப்பட்டவை, அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை. அவசரநிலை காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் ஒருபோதும் மறக்கப்படாது. கட்டாயக் கருத்தடைத் திட்டம் விட்டுச்சென்ற வடுக்கள் ஆற பல ஆண்டுகள் ஆகும். அப்பாவி உயிர்கள் அதிகாரத்தின் கொடூரமான கையால் நிரந்தரமாக பறிக்கப்பட்டன" என்று கூறினார்.

ஜே.பி உடனான தொடர்பு மற்றும் இயக்கம்:

"விடுதி மற்றும் மெஸ் வசதிகளை மேம்படுத்தக் கோரியும், கல்லூரி கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் 1974 மார்ச் 8 அன்று நாங்கள் நடத்திய போராட்டம் ஒரு மாணவர் இயக்கமாக இருந்தது. அதில் அரசியல்வாதிகளின் பங்கேற்பு குறைவாகவே இருந்தது. போராட்டம் வன்முறையாக மாறி, அதன் வீச்சு பெரிதான பிறகு, பாட்னாவில் உள்ள ஜே.பி-யின் இல்லத்தில் அவரைச் சந்தித்து, இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு கோரினோம். ஆரம்பத்தில் தயங்கினாலும், போராட்டத்தில் வன்முறை இருக்கக் கூடாது என்ற ஒரே நிபந்தனையுடன் அவர் ஒப்புக்கொண்டார்" என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.

"1971-ல் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியையும், வங்கதேசம் உருவானதையும் தொடர்ந்து ஒரு வலுவான, அதிகாரமிக்க தலைவராக உருவெடுத்த இந்திரா காந்தியின் ஆட்சி அசைக்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பாட்னாவின் காந்தி மைதானம் முதல் டெல்லியின் ராம்லீலா மைதானம் வரை, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இணைந்து, இந்திராவுக்கு எந்த பிடிமானமும் இல்லாத வகையில் ஜே.பி ஒரு இயக்கத்தை உருவாக்கினார்" என்று லாலு குறிப்பிட்டார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு அவசரநிலை குறித்த பார்வை:

"இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திராவுக்கு ஜனநாயகம் மீது மரியாதை இருந்தது என்று நான் உணர்கிறேன் – அவர் 1977-ல் தேர்தலை அறிவித்தார், தனது தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர், 1980-ல் மீண்டும் ஆட்சிக்கு வர கடுமையாக உழைத்தார்," என்று இந்திரா காந்தியைப் பற்றி லாலு பிரசாத் கூறினார்.

தற்போதைய என்.டி.ஏ ஆட்சி:

"தற்போதைய என்.டி.ஏ ஆட்சியை பொறுத்தவரை, இது ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல உணர்கிறேன். தற்போதைய அரசுக்கு ஜனநாயகம் மீது சிறிதும் மரியாதை இல்லை. மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசின் விருப்பப்படி அரசியல் பழிவாங்கலுக்காக செயல்படுகின்றன. நான் பல ஆண்டுகளாக குறிவைக்கப்பட்டுள்ளேன். ஆனால் நான் பயப்பட மாட்டேன்" என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.

"எந்தக் கல்வி நிறுவனத்திற்குச் சென்றாலும், அவற்றின் செயல்பாடுகளிலும் நியமனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் ஆதிக்கத்தை காணலாம். எதிர்க் கட்சிகளிடம் பேசுங்கள். அரசியல் பழிவாங்கல் பற்றி அவர்கள் கூறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்னும் என்னை குறிவைக்கிறார். இது அவருக்கு எதிராக, அவரது சர்வாதிகார பாணியை எதிர்த்து நிற்கும் ஒரு சிலரில் நானும் ஒருவன் என்பதைக் காட்டுகிறது" என்று பதிலளித்தார்.

வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தல்:

"தேஜஸ்வி யாதவ் (லாலுவின் மகன்) பொறுப்பை நன்றாக சுமக்கிறார். அரசு வேலைகளுக்கான நியமனத்தை மேற்கொள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை அவர் அறிவுறுத்தினார். பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மக்களை நான் எச்சரித்து வருகிறேன். பிரதமர் மோடி தனது பீகார் பயணங்களின் போது வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். யதார்த்தமற்ற அறிவிப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து லாலு பிரசாத் தெரிவித்தார்.

Lalu Prasad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: