டெல்லி ரகசியம்: லாலு பிரசாத்தின் சர்ப்ரைஸ் கால்… வீட்டிற்கு பறந்த சஸ்பெண்ட் எம்.பி.க்கள்

சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது நியாயமற்றது என்றும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷத்தைக் காட்ட வேண்டும் என்றும் லாலு கூறியுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எதிர்க்கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் அழைப்பால் ஆச்சரியப்பட்டனர். எம்பிக்களை காண நாடாளுமன்றத்திற்கு வர முடியாது எனக் கூறி, அனைவரையும் தனது இல்லத்திற்கு வருமாறு லாலு பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்பேரில், மாலையில் எம்.பி.க்கள் அவரை காண வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது நியாயமற்றது என்றும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷத்தைக் காட்ட வேண்டும் என்றும் லாலு கூறியுள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தனது முழு பலத்துடன் ஏன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடவில்லை என்றும் ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சரே இங்க பாருங்க

கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார்களித்து வரும் நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா திங்கள்கிழமை, துணைக் கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு அமைச்சர்களை மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதலில் பழங்குடியின விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, தனது இணைய அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடுவுடன் பேசிக்கொண்டிருந்திருந்தார். அப்போது, பிர்லா அமைச்சரே அமைச்சரே என கூப்பிட்டு 30 நொடிகள் கழித்து தான், அவர் பதிலளித்தார்.இணை அமைச்சருடன் பதில் அளிப்பது குறித்து விவாதிதத்தாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தனது ஆவணங்களை படிப்பதில் தீவிரமாக இருந்தார். அவரையும், மீண்டும் மீண்டும் சபாநாயகர் கூப்பிடும்படி சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, எதிர்க்கட்சியில் ஒருவர், எந்த அமைச்சரும் அவையை கவனிப்பது இல்லை என கிண்டலடித்தப்படி கமெண்ட் செய்தார்.

இரங்கல் அழைப்பு

இந்தாண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்திருந்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைப்பேசியில் அழைத்து, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு இரங்கல் தெரிவித்தார்.

அதன் பிறகு ட்வீட் செய்த ராஜ்நாத் சிங், செயலாளர் ஆஸ்டின், ஜெனரல் ராவத்தின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது அவருடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார். ஜெனரல் ராவத் செப்டம்பர் பிற்பகுதியில் அமெரிக்கா சென்று ராணுவம் மற்றும் சிவிலியன் தலைவர்களுடன் உயர்மட்ட கூட்டங்களை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lalu prasad yadav invites rajya sabha suspended mps to his residence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com