சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிங்கப்பூரில் இருந்து 78 நாட்களுக்குப் பிறகு, குணமடைந்த லாலு பிரசாத் நாடு திரும்பினார்.
இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 25-ஆம் தேதி பூர்னியாவில் திட்டமிடப்பட்டுள்ள மகாகத்பந்தனின் முதல் மெகா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தத் தகவலை ட்விட்டரில் லாலுவுக்கு சிறுநீரகம் தானாக அளித்த அவரின் மகள் ரோகினி ஆச்சார்யா தெரிவித்தார். மேலும் ட்விட்டரில், “ஒரு மகளாக என் கடமையை நான் செய்துள்ளேன்.
அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்த பிறகு அவரை நான் உங்கள் (தொண்டர்கள்) மத்தியில் அனுப்புகிறேன்” என இந்தியில் தெரிவித்திருந்தார்.
மற்றொரு ட்வீட்டில் கவிஞர் ரஹத் இந்தோரியை மேற்கோள் காட்டி, “பிரார்த்தனைக்கு நிறம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
அந்த ட்வீட்டில் லாலு கவனமாக காரில் ஏறும் காணொலி ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்கள் மூலம் தனது ஆதரவுத் தளத்துடன் லாலு தொடர்பில் இருப்பார் என்றும், முறையான மருத்துவ கண்காணிப்பை உறுதி செய்வதற்காக தனது மூத்த மகளும், மாநிலங்களவை எம்பியுமான மிசா பார்தியின் டெல்லி இல்லத்தில் தங்குவார் என்றும், அங்கு அவர் மக்களைச் சந்திக்கலாம் என்றும் ஆர்ஜேடி தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ஜேடி தேசிய செய்தி தொடர்பாளர் சுபோத் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “லாலு பிரசாத் சமூக நீதி மற்றும் புரட்சியின் உருவகம். சமூகத்தின் அந்நியப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.
அவரது வாழ்க்கை துணிச்சலுக்கும் நெகிழ்ச்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டு. அவர் கட்சி தொண்டர்களுக்கு புதிய ஆற்றலைப் புகுத்தப் போகிறார்” என்றார்.
கட்சியின் பூர்ணியா கூட்டம் குறித்து ஆர்ஜேடி மாநில செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களிடம் கேள்விகள் கேட்ட அதே மைதானத்தை அவருக்கு பதில் அளிக்க நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.
2024 ஆம் ஆண்டுக்கான எங்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான முக்கியமான இடமாகும். AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி எப்படி பாஜகவின் பி-டீம் ஆகிறார் என்பதையும், அவர்கள் இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் மக்களுக்குச் சொல்வோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/