ராணுவ வீரர் சந்தீப் சிங் மரணம் : 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று அங்கிருந்த தீவிரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது இந்திய ராணுவப் படை. இந்த வருடம் முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தினை கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் அந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலில் பங்கேற்றவர்களில் ஒருவர் தான் லான்ஸ் நாய்க் சந்தீப் சிங். அவர் திங்களன்று காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்.
திங்கள் அன்று காஷ்மீரில் இருக்கும் சர்வதேச எல்லையிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்தர் பகுதியில் சந்தீப் மற்றும் அவருடைய குழுவினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ராணுவ வீரர் சந்தீப் சிங் மரணம் - இறுதி அஞ்சலி செலுத்திய 5 வயது மகன்
அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஆட்களின் நடமாட்டம் இருந்த காரணத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தும் சூழல் ஏற்பட்டது. சந்தீப் சிங் மட்டும் அங்கு தக்க நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் சென்றிருந்தால் சந்தீப் மற்றும் அவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அவருடன் பணிபுரிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சந்தீப் சிங்கின் மனைவி மற்றும் ஐந்து வயது மகன்
இறுதி அஞ்சலியின் போது அவருடைய மனைவி குர்பீத் கவுர் மற்றும் ஐந்து வயது மகன் அபினவ் சிங் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். ராணுவ வீரர் சந்தீப் சிங்கின் உடல் நேற்று மதியம் பஞ்சாப் மாநிலம் குர்தஸ்பூர் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.